சேவல்லா:''தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறது;
அக்கட்சி காங்கிரசை ஏமாற்றியுள்ளது,'' என்று, காங்., தலைவர் சோனியா
கடுமையாக விமர்சித்தார்.தெலுங்கானா பகுதியில், ரங்கா ரெட்டி
மாவட்டத்தில், தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், காங்., தலைவர் சோனியா
பேசியதாவது:டி.ஆர்.எஸ்., என்ற தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, அளித்த
வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. காங்கிரசுக்கு நம்பிக்கை துரோகம்
செய்துள்ளது. அக்கட்சிக்கு, தெலுங்கானா வளர்ச்சியில் நம்பிக்கையில்லை.
அதிகாரத்தில் மட்டுமே குறியாக உள்ளது.அக்கட்சி சந்தர்ப்பவாத அரசியல்
நடத்துகிறது. கடந்த காலங்களில் மதவாத சக்திகளுடன் கைகோர்த்துள்ளது.
தெலுங்கானா உருவானதும், பா.ஜ.,வுடன் கைகோர்த்ததன் மூலம், அக்கட்சியின்
உண்மை நிறம் தெரியவந்துள்ளது. இவ்வாறு, சோனியா பேசினார். சந்திரசேகர ராவ் மேலயும், விஜயசாந்தி ஆண்ட்டி மேலயும் கேஸ் போட ஆரம்பிச்சுட்டீங்க போல இருக்கே ???? நடத்துங்க .
தெலுங்கானாவில், வரும் 30ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்க, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் கட்சியை வலியுறுத்தியது. தெலுங்கானா மாநிலம் உருவானதும், காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பதாகவும், முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனவும் சந்திரசேகர ராவ் கோரிக்கை வைத்து இருந்தார்.ஆனால், சொன்னதற்கு மாறாக, நடந்து கொண்டதால், சமீபத்தில், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல், 'சந்திரசேகர ராவ் முதுகில் குத்திவிட்டார்' என, கோபமாக கூறியிருந்தார். dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக