சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட இரட்டைக் குண்டு
வெடிப்பு சம்பவத்தில் சந்தேகத்திற்கு உரிய நபர் அடங்கிய வீடியோ காட்சிகளை
சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர். சென்னையில் உள்ள தென்னக ரயில்வே அலுவலகத்தில் சிபிசிஐடி ஐ.ஜி. மகேஷ்குமார்
அகர்வால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
இசென்னை ரயில் நிலையத்தில் பதிவான சிசிடிவி கண்காணிப்பு கேமிராவில் பதிவான
நபரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு உரிய வகையில் அமைந்துள்ளது.
இஇவர்தான் குற்றவாளி என்று உறுதியாக கூற முடியாது. சம்பந்தபட்ட நபர்
குறித்து தகவல் தெரிந்தால், 7708654220 என்ற செல்போன் எண்ணிலும், 044-
22502510, 22502500 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
பாட்னா மற்றும் சென்னையில் ஒரே மாதிரியான வெடிப்பொருட்கள்தான்
பயன்படுத்தப்பட்டுள்ளன. காலை 5.40 மணிக்கு வந்தடைய வேண்டிய குவஹாத்தி
விரைவு ரயில், சரியான நேரத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை
கடந்திருந்தால் ஆந்திர எல்லையில் இந்த வெடிகுண்டுகள் வெடித்திருக்கும்.
இந்த குண்டுகள் சென்னைக்கு முன்பாகவே வேறொரு ரயில் நிலையத்தில்
வைத்திருக்கலாம். குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் கிடைத்த உடைந்த
கடிகாரப் பகுதி மூலம் டைமர் பாம் பயன்படுத்தப்பட்டதும் உறுதி
செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக