எம்.பி.ஏ. மற்றும் அதன் வேலைவாய்ப்புகள் குறித்து இரண்டாம் நிலை
சென்ற ஆண்டைவிட 45 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பிசினஸ் ஸ்கூல்களில் அதிரடி சர்வே நடத்தியது அசோசெம். அதில், எம்.பி.ஏ. படித்தவர்கள் 18 சதவீதம் பேருக்குத்தான் இந்தியாவில் வேலை கிடைக்கிறது. மற்றவர்கள் வெறும் பட்டத்தோடுதான் இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி புள்ளி விவரத்தை தெரிவித்துள்ளது. மேலும் பிசினஸ் ஸ்கூல்களில் இருந்து கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலைக்கு செல்லும் மாணவர்களுக்கான சம்பளமும்
இதுகுறித்து, அசோசெம்மின் பொதுச் செயலாளர் டி.எஸ்.ராவத் கூறுகையில், ''பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை, புதிய திட்டங்களின் தேக்கநிலை, அடிப்படை கட்டுமானம், ஹோட்டல், நிதிச்சேவைகள், ரியல் எஸ்டேட் மற்றும் சில்லறை வர்த்தக துறைகளில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டாதது போன்ற காரணங்களால் எம்.பி.ஏ. மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வீழ்ச்சியடைந்துள்ளது.
2013 ஆம் ஆண்டில் மட்டும் மும்பை, பெங்களூர், அகமதாபாத், கொல்கத்தா, லக்னோ மற்றும் டேராடூன் போன்ற நகரங்களில் உள்ள 220க்கும் அதிகமான பிசினஸ் ஸ்கூல்கள் மூடப்பட்டுவிட்டது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் இயங்குவதற்கே திணறிக் கொண்டிருக்கின்றன. அதேபோல், இந்தியாவின் முன்னிலை மேலாண்மை கல்வி நிலையங்களான, ஐ.ஐ.எம், எஃப்.எம்.எஸ் போன்றவற்றில் சேர நடத்தப்படும் கேட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் குறைந்துவிட்டது.
சில மேலாண்மை கல்வி நிலையங்கள் தங்கள் கல்வி நிலையத்தின் பெருமைகளை பறைசாற்றுவதற்கும், எப்படியாவது மாணவர்களை எம்.பி.ஏ. படிப்பில் சேர்ப்பதற்கும், முன்னணி தொழில் நிறுவனங்களிடம் பணம் செலுத்தி, கேம்பஸ் இன்டர்வியூ நடத்தக்கூடிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இதை அறியாத பல மாணவர்கள் கவர்ச்சிகரமான விளம்பரத்தை மட்டுமே நம்பி தங்கள் வாழ்க்கையை தொலைத்துக் கொள்கிறார்கள் என்பதே நிதர்சனம்.
எம்.பி.ஏ. படிப்பில் சேருவதற்கான கல்வி நிறுவனங்கள் உயர்ந்த அளவிற்கு, படிப்பின் தரம் உயரவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.'' என்று தெரிவித்துள்ளார் dailythanthi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக