வியாழன், 24 அக்டோபர், 2013

திருவண்ணாமலையில் கந்துவட்டி கொடுமையால் குடும்பமே லாட்ஜில் தற்கொலை

திருவண்ணாமலை: புதுக்கோட்டை மறைமலை நகரை சேர்ந்தவர் சேகர் (57). அவரது மனைவி ஹேமமாலினி (55). இருவரும் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்தனர். இவர் களது மகன் பிரனேஷ்வரன்(17).இந்நிலையில், சேகர் தனது மனைவி மற்றும் மகனுடன் நேற்று அதிகாலை 3 மணிக்கு திருவண்ணாமலை வந்தார். பஸ் நிலையம் அருகேயுள்ள ஒரு லாட்ஜில் தங்கினர்.காலை 9 மணி வரை சேகர் தங்கியிருந்த அறை கதவு திறக்கவில்லை. மேலும், அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதை லாட்ஜ் ஊழியர்கள் கவனித்தனர். அதைத் தொட ர்ந்து, அறை கதவை தட்டினர். ஆனால் அறையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. கதவையும் திறக்கவில்லை.சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து மாற்று சாவி மூலம் அறையை திறந்தனர்.உள்ளே கட்டிலில் படுத்த நிலையில் சேகர், ஹேமமாலினி ஆகியோர் இறந்து கிடந்தனர். பிரனேஷ்வரன் உயிருக்கு போராடி கொண்டிருந் தார்.
அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சேகர், ஹேமமாலினி சடலங்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.3 பேரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்தது விசாரணையில் தெரியவந்தது. சேகரின் சட்டை பாக்கெட்டில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.அதில், கடன் வாங்கிய கந்து வட்டி கும்பல் மிரட்டுவதால், தற்கொலை செய்து கொள்வதாக எழுதியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். dinakaran.com

கருத்துகள் இல்லை: