தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் கழகங்களும் மட்டுமல்லாமல் பேரவைகள் மற்றும் ஜாதி சங்கங்களும் யார் யாரோடு கூட்டு சேரலாம் சேர்ந்தால் என்ன கிடைக்கும் ? என்று நித்திரை இல்லாமல் கூட்டல் கழித்தல் கணக்குகள் போட்ட வண்ணமே உள்ளன,
அதிமுக பாஜக வுடனா ? காங்கிரசுடனா? அல்லது மூன்றாவது நாலாவது அணிகளுடனா தனியாகவா என்று எல்லா ஆப்ஷனையும் திறந்து வைத்து கொண்டிருக்கிறது , இதில் ஒன்றும் வியப்படைவதற்கு இல்லை , சொத்து குவிப்பு வழக்கு ஒன்றே அதன் முதல் பிரையோறேட்டி , அடுத்து ஜால்றாக்களால் உசுப்பி விடப்பட்ட பிரதமர் பதவி ஆசையும் அடிக்கடி எட்டி பார்க்கிறது .
கூட்டணி மாறுதல்களில் அனேகமாக அதிர்ச்சி அல்லது நம்ப கஷ்டமான கணக்கு திமுக காங்கிரஸ் இடையே உள்ளது போல்தான் தெரிகிறது,
கலைஞர் காங்கிரசை மன்னிக்க வில்லை ,ஆனால் அதை வெளிகாட்டி கொள்ளாமல் இதர கட்சிகளுடன் தனது பேரம் பேசும் கிராக்கியை தக்க வைத்து கொண்டிருப்பதாக தெரிகிறது, தமிழ்நாட்டில் காங்கிரசை திமுக தவிர்ந்த எல்லா கட்சிகளும் வறுத்து எடுக்கின்றன, ஆனால் உண்மையில் காங்கிரசுக்கு எப்படியாவது கடும் பாடம் புகட்ட திமுக தயாராகிறது, அனேகமாக காங்கிரஸ் முதல் தடவையாக தமிழ்நாட்டில் ஜீரோ எடுக்க போகிறது ,
பக்கா சினிமா அரசியல் பண்ணும் விஜயகாந்தின் பவுண்டேசன் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் கண்டுவருவதை அவரே புரிந்து கொண்டதுதான் ரொம்ப விசேஷம் ,
அரசியல் வெற்றியை விட ஏதாவது நல்ல பதவிகள் மாநிலத்திலும் மத்தியிலும் கிடைத்தால் சேமம் என்ற நிலைக்கு கப்பித்தான் வந்துவிட்டார்,
அதனால் பாமகவுக்கு ஒரு புதிய போட்டி கிடைத்திருக்கு ,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக