நான் தெனாலி படத்தை எடுத்தேன்.
அதுவும் ஒரு இலங்கை குறித்த படம் தான். அது ஒரு பக்கத்தை சொல்கிறது. ஆனால்
மறு பக்கம் தான் 'மெட்ராஸ் கஃபே' ஆகும். ஆனால் அதனை வெளியிட முடியவில்லை.
நான் அதுபோன்று இலங்கையில் மறுபக்கம் குறித்து ஒரு படத்தை எடுக்க
நினைத்தாலும் கூட அது என்னால் முடியாது. இங்கே கருத்து சுதந்திரம் என்பது
கிடையாது என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். இவர் அடிக்கடி
பாவிக்கும் அந்த "மறு பக்கம்" என்ன என்று உங்களுக்கு சிலவேளை புரியாமல்
இருக்கலாம். அதாவது இலங்கையில் தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி
படமாக எடுக்கலாம். ஆனால் மறுபக்கம்(புலிகள் புரிந்த போரை) பற்றி ஏதாவது படம்
எடுத்தால் அதற்கு சுதந்திரம் இல்லை என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் கமல். இவர் நாசுக்காகக் குறிப்பிடுவது புலிகள் செய்த போரை
மட்டுமல்ல. அவர்கள் கொலைசெய்ததாகக் கூறப்படும் மனிதர்களையும் சேர்த்து தான்
குறிப்பிடுகிறார்.
அதாவது இவர் தெரிவிக்க வரும் கருத்து ராஜீவ் கொலைபற்றியது தான். இக் கொலை தொடர்பாக கமலுக்கு பெரும் சங்கடம் இருக்கிறது. ஆனால் எங்கே வாயை திறந்து மாட்டிக்கொள்வோமோ என்று பயமும் உள்ளது. இவர் நடிக்கும் படங்கள் இந்தியாவில் கோடிக்கணக்கில் வசூல் ஆவதுபோல வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களாலும் மேலும் பணம் வசூல் ஆகிறது அல்லவா ! இதனால் அவர்களை பகைத்துகொள்ள முடியாமல் மற்றும் மனதில் உள்ள விடையத்தை வெளியே சொல்லவும் முடியாமல், மறு -பக்கம் .... மறு -பக்கம் என்று பேசியிருக்கிறார் கமல் ! soodram.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக