மராட்டிய
மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹசன் அலி. குதிரைப்பண்ணை
நடத்துவதுடன், ரியல் எஸ்டேட் உள்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார். அவர் வரிஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது. அதன்பேரில், கடந்த 2007–ம் ஆண்டு அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். >அப்போது, சுவிட்சர்லாந்தில் ஜூரிச் நகரில் உள்ள யு.பி.எஸ். வங்கியில் ஹசன் அலி ரகசிய கணக்கு வைத்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். 800 கோடி டாலர் (சுமார் ரூ.50 ஆயிரம் கோடி) கறுப்பு பணத்தை அவர் போட்டு வைத்திருப்பது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றினர்.

ஆனால்,
இந்தியாவில் அவர் தாக்கல் செய்த வருமானவரி கணக்கில் இந்த விவரத்தை
குறிப்பிடவில்லை. மேலும், சுவிஸ் வங்கி அதிகாரிகளின் உதவியுடன், போலி
வருமானவரி கணக்கை தாக்கல் செய்ததாகவும் தெரிய வந்தது.
இதையடுத்து,
ஹசன் அலியின் கணக்கு விவரங்களை அளிக்குமாறு சுவிஸ் வங்கிக்கு
அமலாக்கப்பிரிவு கடிதம் அனுப்பியது. ஆனால், கணக்கு விவரங்களை அளிக்க சுவிஸ்
வங்கி மறுத்து விட்டது.
இதற்கிடையே,
சுப்ரீம் கோர்ட்டின் தொடர் நிர்ப்பந்தத்தால், கடந்த 2011–ம் ஆண்டு மார்ச்
மாதம், அமலாக்கப்பிரிவு, ஹசன் அலியை கைது செய்தது. வரி ஏய்ப்புக்காக ரூ.70
ஆயிரம் கோடி செலுத்துமாறு அவரை கேட்டுக்கொண்டது. ஹசன் அலி, கடந்த 2
ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் இருந்து வருகிறார்.
இதற்கிடையே,
சுவிஸ் வங்கியில் உள்ள அவருடைய கறுப்பு பணத்தை மீட்டு கொண்டுவர வருமான
வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர். அதற்காக, மத்திய அரசின் தலைமை
வக்கீலான அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதியிடம் கருத்து கேட்டனர். ஆனால்,
கறுப்பு பணத்தை மீட்டுவர இயலாது என்று வாகன்வதி கூறிவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக