இந்து நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள்... நிறுவனத்தின் தலைவர் என் ராம்..
1991 முதல் 2003 வரை இந்துவின் ஆசிரியராக இருந்தவர் என் ரவி என்பது
குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பின் 2003லிருந்து 2012 வரை முதன்மை
ஆசிரியராகப் பதவி வகித்தார் என் ராம்.
2011-ம் ஆண்டு கஸ்தூரி அண்ட் சன்ஸ் இயக்குநர்கள் குழுவில் ஏற்பட்ட கருத்து
வேறுபாடு மற்றும் பதிப்பாளர் என் முரளி மற்றும் நிர்வாக ஆசிரியராக இருந்த
மாலினி பார்த்தசாரதி போன்றோரின் ராஜிநாமாவைத் தொடர்ந்து, கஸ்தூரி
குடும்பத்துக்கு வெளியிலிருந்து முதல் முறையாக ஆசிரியராக சித்தார்த்
வரதராஜனை 2012-ல் நியமித்தார் என் ராம்.
மதிப்பீடுகளைச் சிதைத்தார் சித்தார்த்
ஆனால் ஆசிரியராக சித்தார்த் வரதராஜனின் செயல்பாடுகள் மற்றும் முடிவுகள்
இந்துவின் பாரம்பரிய மதிப்பீடுகளை குறுகிய காலத்தில் சிதைத்துவிட்டதாகவும்,
அதை மீட்டு மீண்டும் இந்துவை அதன் உயர்ந்த பாரம்பர்ய மதிப்பில் வைக்கவே
இந்த முடிவுகள் என்றும் என் ராம் தெரிவித்துள்ளார்.
Sidhard Varadarajan
சி இ ஓ வாக இருந்த அருண் ஆனந்த்தால், தொழில் முறை உறவுகள்
பாதிக்கப்பட்டதாகவும் என் ராம் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த மாற்றங்கள் மூலம் மீண்டும் இந்து நாளிதழ் முழுக்க முழுக்க கஸ்தூரி குடும்பத்தின் ஆதிக்கத்துக்குள் வந்துள்ளது.
ஆசிரியர் ரவி! சென்னை: தி இந்து குழும நிர்வாகம் மொத்தமாக மாறியிருக்கிறது. நிறுவனத்தின் தலைவர் மற்றும் வெளியீட்டாளராக என் ராம் பதவி ஏற்றிருக்கிறார். அவரது சகோதரர் என் ரவி மீண்டும் முதன்மை ஆசிரியராகியுள்ளார். இந்து ஆசிரியராக மாலினி பார்த்தசாரதி நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை முதன்மை ஆசிரியராக இருந்த சித்தார்த் வரதராஜன் மற்றும் நிறுவனத்தின் சிஇஓ அருண் ஆனந்த் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 'நிறுவனத்தின் நீண்ட கால பாரம்பர்யத்துக்கு பாதிப்பு ஏற்படும் விஷயங்கள் தொடர்ந்ததால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது,' என ராம் விளக்கமளித்திருக்கிறார்! தி இந்து ஆங்கில நாளிதழ் மற்றும் கஸ்தூரி அன்ட் சன்ஸில் மட்டுமே இந்த மாற்றங்கள் என்றும், நிறுவனத்தின் பிற நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் இப்போது உள்ள நிலை தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக