செவ்வாய், 22 அக்டோபர், 2013

புருனையில் கடும் இஸ்லாமிய சட்டம் அல்லாவின் கருணையால் வருகிறதாம் ! சுல்தான் அறிவிப்பு !

கடந்த ஆறு நூற்றாண்டுகளாக முழுமையாக
மன்னராட்சியின் கீழ் இருக்கும் புரூனேயின் இப்போதைய மன்னராக இருப்பவர் சுல்தான் ஹசனல்
போல்கியா(67) ஆவார். இவர் இன்று முதல் அந்த நாட்டில் கடுமையான ஷரியா தண்டனைச் சட்டங்கள் பின்பற்றப்படும் என்று அறிவித்துள்ளார்.< ‘கடந்த 1996ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டங்கள் இஸ்லாமிய பழைமைவாதத்தைக் குறிப்பவை ஆகும். இன்று அறிமுகப்படுத்தப்படும் இந்த சட்டங்கள் இன்னும் ஆறு மாதத்திற்குள் முழுமையாக அமலுக்கு கொண்டு வரப்படும்’ என்றும் அவர் தெரிவித்தார். இந்த சட்டத்தின்படி, விபச்சாரம், கொலை போன்ற குற்றங்களுக்கு கல்லால் அடித்து மரண தண்டனை வழங்குதல், திருட்டுக் குற்றங்களுக்கு மூட்டுகளை முறித்தல், கருக்கலைப்பு, மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு வகையான குற்றங்களுக்கு சவுக்கடி மூலம் தண்டனை வழங்குதல் போன்ற கொடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட வழக்குகளைப் பொறுத்து தண்டனைகள் நிர்ணயிக்கப்படலாம். இந்த தண்டனைகள் இஸ்லாமியர்களுக்கு மட்டும் பொருந்தும் என்று தெரிவித்துள்ள அரசர், அல்லாவின் கருணையால் இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டு அவருக்குரிய கடமைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன என்று கூறியுள்ளார்.


புரூனேவிற்கு தென்கிழக்கே உள்ள ஆசிய முஸ்லிம் நாடுகளான மலேசியா மற்றும் இந்தோனேசியாவை ஒப்பிடும்போது அந்நாட்டில் பழமைவாதம் மிக்க இஸ்லாமியம் அதிகரித்தே காணப்படுகின்றது. பொது இடங்களில் மது விற்பனையோ, மது அருந்துதலோ பூரணமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி மற்ற மதத்தினரும் இங்கு மிகவும் கட்டுப்படுத்தப்பட்டே உள்ளார்கள்.

4,00,000 மக்கள் வசிக்கும் இந்த நாட்டில் மன்னரின் ஆணைக்கு அனைவரும் கட்டுப்படுகின்றனர். இந்த நிலையில் இத்தகைய கடுமையான சட்டங்கள் விதிக்கப்படுவது புரூனே மக்களிடையே அமைதியான சலசலப்பையே ஏற்படுத்துகின்றது. அதுமட்டுமின்றி பெரும்பான்மையான மலாய் சமூகம் கொண்ட இந்த கலாச்சாரத்தில் இத்தகைய தண்டனைகள் தேவையற்றவை என்பது மக்களின் கருத்தாகும்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: