வெள்ளி, 25 அக்டோபர், 2013

மாணவர்கள் மீது சோ கட்டவிழ்க்கும் பயங்கரவாதம் ! ஜேப்பியார் ஏசி சண்முகம் பச்சமுத்து s a ராஜா vit விசுவநாதன் இன்னும் பல நினச்சாலே வாந்தி !

சோசோவைப் பொறுத்தவரை சட்டம் என்பது வெகு மக்களுக்கானது; அவர்களை ஒட்டச் சுரண்டும் போது அவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டாமல் இருக்க உபயோகிக்கப்படுத்த வேண்டிய ஆயுதம். 
ன்ஃப்ன்ட் ஜீசஸ் கல்லூரி முதல்வர் கொலையை ஒட்டி மாணவ சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அரசு மற்றும் ஊடக பயங்கரவாதம் அதன் எல்லா எல்லைகளையும் தாண்டியிருக்கிறது. துக்ளக்  23.10.2013 இதழின் ’கட்டுப்பாடு தேவை’ என்ற தலையங்கம் இந்த பயங்கரவாதத்தின் உச்சக்கட்டம். வாசகர்களின்  பார்வைக்கு அதன் முக்கியமான பகுதியை கீழே கொடுக்கிறோம்.

சோ
        ”…… இந்த சம்பவம் பற்றிய செய்தி வந்த அடுத்த இரண்டு நாட்களிலேயே, வேறு இரு கல்லூரிகளின் மாணவர்கள், கத்தி வீச்சுடன் சண்டையிட்டுக் கொண்ட செய்தி வெளியாகியது. இம்மாதிரி பல நிகழ்ச்சிகளில்ஈவ்-டீசிங்கும் ஆரம்ப நிகழ்ச்சியாக இடம் பெறுகிறது. ஆசிரியர்களாலோ, பள்ளி அல்லது கல்லூரி நிர்வாகத்தாலோ மாணவர்கள் கண்டிக்கப்படுவது என்பதே ஒரு குற்றம்என்பது போன்ற சூழ்நிலை தோன்றி விட்டது தான், இந்த மாதிரி அராஜகங்களுக்கு அடிப்படைக் காரணம். ஒரு மாணவனை ஆசிரியர் கண்டித்தால், அது ஒரு பெரிய விவகாரமாகி விடுகிறது. சஸ்பென்ஷன் போன்ற நடவடிக்கைகள் வந்தால், அவை மனிதாபிமானமற்ற செயல்களாகி விடுகின்றன.
        ”இவ்வளவு தூரம் போவானேன்? உடை விஷயத்தில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வர முயற்சிகிற கல்லூரிகளும், அவற்றின் நிர்வாகிகளும் சர்வாதிகாரிகளாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். தீவரவாதிக்கு அடுத்தபடியாக, மனித உரிமையாளர்களால் நேசிக்கப்படுகிறவர்கள் மாணவர்கள் தான். தவறு செய்வதும், ஆசிரியர்களை மதிக்காமல் நடப்பதும், கத்தி கபடா அரிவாள் போன்றவற்றுடன் கல்லூரிக்கு வருவதும்மனித உரிமையாளர்களின் அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமைகளாக்கப்பட்டிருக்கின்றன.
        ”எந்த பருவத்தில் கட்டுப்பாடு போதிக்கப்பட வேண்டுமோ அந்த வயதில் தான்தோன்றித்தனம் வளர அனுமதிக்கப்படுவதில், இந்த மனித உரிமைக் கூட்டமும், மீடியாவும், சினிமாவும் பெரும் பங்கு வகிக்கின்றன.
        ”’ஜீரோ டாலரன்ஸ்என்கிறசிறு தவறையும் அனுமதிக்காத கண்டிப்புபள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கடைபிடிக்கப்பட வேண்டும். அதை எதிர்த்துக் கண்டனம் தெரிவிக்கும் போக்கை மனித உரிமையாளர்களும் மீடியாவினரும் கைவிட வேண்டும்.
ஜேப்பியார்
ஜேப்பியார்
        ”மற்ற பல நாடுகளிலும் இருக்கிறடிஸிப்ளின்நம் நாட்டில் இல்லை; அதிலும் குறிப்பாக இளைஞர்களிடம் டிஸிப்ளின் என்று பேசுவதே பெரும் குற்றமாக இருக்கிறது. தெருக்களில், மாணவர்கள் இரு சக்கர வாகனத்தைக் கண்மூடித்தனமாக ஓட்டிச் செல்கிற வெறித்தனம் ஒன்றே போதும்இன்றைய மாணவர்கள் சட்டத்தை மதிப்பதையே அவமானமாக நினைக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்கு.
        ”தூத்துக்குடி மாவட்ட நிகழ்ச்சிக்குப் பிறகாவது, சமூகம் விழித்துக் கொள்ள வேண்டும். மாணவர்களை மிலிட்டரி டிஸிப்ளின் என்ற அளவிலான கட்டுப்பாடுகளுக்கு அடங்கி நடக்க வைப்பது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் கடமை. அதை எதிர்க்காமல் இருப்பது, சமூகத்தின் பொறுப்பு.இது மாணவர்களைச் சிறையில் அடைப்பது போலாகி விடும்என்று சொல்லக் கூடிய மனித உரிமையாளர்கள் இருப்பார்கள். அப்படியே இருக்கட்டும்; இல்லாவிடில்இன்றைய மாணவர்கள் நாளைய சிறைக் கைதிகள்’ –என்ற நிலை தோன்றிவிடும். அதைத் தவிர்ப்போமாக.”
இந்த தலையங்கம் பொது சமூகத்திற்கு வைக்கும் வேண்டுகோளையும் அதற்கு அடிப்படையாக சோ சுட்டிக்காட்டும் மாணவர்களின் மிகப்பெரிய தவறுகள்  (சோவின் கூற்றுப்படி பார்த்தால் கூட இவை குற்றங்களல்ல; மாறாக தவறுகளே) என்ன என்பதையும் அவற்றிற்கு இன்றைய தனியார் சுய நிதிக்கல்லூரி நிர்வாகங்களும், அவற்றின் கைக்கூலிகளான பேராசிரியர்களும் வழங்கும் தண்டனைகளையும், இம்மாதிரியான தண்டனைகள் மாணவர்களுக்கு அளிக்கப்படுவது குறித்து மனித உரிமையாளர்களும் மீடியாவும், பொது சமூகமும், அரசும் இதுவரை ஆற்றியுள்ள எதிர்வினைகளும் என்ன என்பதை நாம் விரிவாகப் பார்த்தால் தான், சோ இனி நடைமுறைப்படுத்த அறைகூவல் விடுக்கும் ‘ஜீரோ டாலரன்ஸ்’ மற்றும் ’மிலிட்டரி டிஸிப்ளின்’ போன்றவற்றின் பயங்கரமும் இந்த அறைகூவலுக்கு பின்னாலிருக்கும் வர்க்க நலனையும் புரிந்துகொள்ள முடியும்.
எண் சுயநிதிக்கல்லூரி மாணவர்கள் செய்யும் குற்றங்கள் தற்போது வழங்கப்படும் தண்டனைகள்
1 செருப்பு அணிவது, டக் – இன் பண்ணாமலிருப்பது, ஐடி கார்ட் அணியாமல் இருப்பது, தாடி மழிக்காமல் (முஸ்லீம் மாணவர்களாக இருந்தாலும்), முடி வெட்டாமல் வருவது,மாணவிகள் செருப்பு அணிவது, கட் ஷூவில் மாடல்களை அணிவது, முட்டுவரையான/ முட்டுக்குமேலெ சுடிதார் போடுவது, கையில்லாத, பின்னால் கட்டும் சுடிதார் அணிவது, துப்பட்டா இரண்டு பக்கமும் பின் போடாமல் வருவது, அம்ப்ரல்லா மாடல் சுடிதார் அணிவது,நண்பர்களின் பிறந்தநாளுக்கு மாணவர்கள் கேக் வாங்கி வருவது முதல் வார்னிங் – அடி, கிள்ளு, கெட்ட வார்த்தையால் அர்ச்சனை, மேற்கொண்டும் தண்டனை கொடுப்பவருக்கு கோபம் தீரவில்லையென்றால் கேட்டுக்கு வெளியே மாணவன் நாள் முழுவதும் நிற்க வேண்டும்,  வருகைப் பதிவு இல்லை, வகுப்புகளை கவனிக்க அனுமதிக்கப்பட மாட்டார்.இரண்டாவது வார்னிங் – 200-500 ரூபாய் தண்டம், ஐடி கார்டு பறிக்கப்படும்மூன்றாவது வார்னிங் – இடைநீக்கம், பெற்றோர்கள் நேரடியாக வந்து மேலும் இப்படி நடக்காது என்று உறுதியளிக்க வேண்டும்
2 5 நிமிடம் கல்லூரிக்கு லேட்டாக வருவது கல்லூரிக்கு உள்ளே அனுமதிக்கப்படமாட்டார். இப்படி தொடர்ச்சியாக நடந்தால் அம்மாணவன் கண்காணிப்புக்குள்ளாக்கப்பட்டு தேர்வு எழுதவிடாமல் செய்வது, செமஸ்டர் ரிப்பீட், பொது இடத்தில் அவமானப்படுத்துதல்.
3 வகுப்புக்கு வெளியே வகுப்பு நேரத்தில் சென்றால் (சொந்த வேலையாகவோ, கல்லூரி வேலையாகவோ) பொறுக்கி, புறம்போக்கு, எங்கே பொறுக்கிட்டு வற… போன்ற அர்ச்சனைகள், ஐடி கார்டு புடுங்குதல், உதை கிள்ளு…
4 தினம் காலை முதல் வகுப்பில் நடத்தப்படும் தேர்வு, யூனிட் டெஸ்ட், சைக்கிள் டெஸ்ட், மாடல் தேர்வில் தோல்வியடைந்தால் கெட்ட வார்த்தையால் அர்ச்சனை, மீண்டும் ஜெயிப்பது வரை தேர்வு எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்.பெற்றோர்கள் நேரில் வரவழைக்கப்படுவார்கள்அபராதம் கட்ட வேண்டும். பெரும்பான்மையான நேரத்தில் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதில்லை.
5 அடுத்த வருடத்திற்கான அனைத்து கட்டணங்களையும் (விடுதி, பஸ் மற்றும் டியூஷன் கட்டணம் உட்பட) இந்த ஆண்டிறுதிக்குள் கட்டாமல் இருந்தால் 1. ஐந்து நாட்கள் வரை நாளொன்றுக்கு ரூ. 200 அபராதம்2. ஐந்து நாட்களுக்கு மேல் ரூ. 5000 அபராதம்3. ஹால் டிக்கட்டை வழங்காமல் இருப்பதோடு தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்4. கட்டணத்தைக் கட்டிய பின்னரும் அபராதம் அல்லது மீதி பணம் கட்ட வேண்டியிருந்தால் ஹால் டிக்கட் வழங்கப்படாது. தேர்வு எழுதுவதற்கு 5 நிமிடம் முன் வரை நாயைப் போன்று ஒவ்வொரு இடமாக அலைக்கழிக்கப்படுவார். பெற்றோர்கள் போன் மூலம் கேட்டுக் கொண்டால் மாணவர்கள் இன்னும் கடுமையாக பிற மாணவர்கள் முன் அவமதிக்கப்படுவார்கள். இந்த பீதியில் பல மாணவர்கள் தேர்வை ஒழுங்காக எழுதமுடியாமல் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.
6 கல்லூரி வளாகத்துக்குள் ஆண் பெண் பேசிக்கொண்டால் (அண்ணன், தங்கையாக இருந்தால் கூட) 1. கேமரா மூலம் அனைத்து வகுப்புகளும் எல்லா நேரமும் கண்காணிக்கப்படுகிறது2. பலர் முன் கெட்ட வார்த்தையால் திட்டி அவமானப்படுத்துதல்3. அடித்தல், ஐடி கார்டை பறித்து வைத்துகொண்டு பெற்றோர்களிடம் புகார் கொடுத்தல்4. ரூ. 10,000 வரை அபராதம்
7 இரண்டு நாட்களுக்கு மேல் விடுமுறை எடுத்தால் ஒவ்வொரு நாளைக்கும் ரூ. 200 – 500 அபராதம்.நாள் முழுக்க கேட்டிற்கு வெளியே நிற்க வேண்டும்
8 மூன்று நான்கு நாள் பண்டிகைக்கால விடுமுறைக்குப் பின் அடுத்த வேலை நாளில் லேட்டாக வந்தாலோ, வராமலிருந்தாலோ ரூ. 1000 அபராதம், வகுப்பிற்குள் அன்றைய நாள் முழுக்க அனுமதிக்கப்பட மாட்டார்
9 மொபைல் ஃபோன் வைத்திருந்தால் (அணைத்து வைத்திருந்தால் கூட) 4 – 10 நாட்கள் இடைநீக்கம், பெற்றோர்களை அழைத்து வர வேண்டும், அபராதம் ரூ 1000 த்திலிருந்து, போண் திருப்பிக்கொடுக்க மாட்டார்கள்
10 கல்லூரி நிர்வாகம் வழங்கும் மேற்படி தண்டனைகளால் (வகுப்புக்குள் அனுமதிக்காமல் இருப்பது, இடைநீக்கம்) ஏற்படும் வருகை குறைவுக்கு (attendance shortage) 1. செமெஸ்டர் தேர்வு எழுத ரூ. 2000 – ரூ 5000 அபராதம்2. அந்த ஆண்டை மீண்டும் படிக்க வேண்டும் (repeat semester)
11 மாணவர்களுக்குள் ஏற்படும் சின்னச் சின்ன சண்டைகள்காதல் வயப்பட்ட மாணவன் மாணவியிடம் காதலை வெளிப்படுத்த முயற்சித்தல் 1. அடி, உதை, அவமானப்படுத்துதல், பெற்றோர்களை வரவழைத்து அவமானப்படுத்துதல் பின்னர் கல்லூரியிலிருந்து இரு தரப்பு மாணவர்களும் வெளியேற்றப் படுவார்கள்.2. மாணவன் ஈவ்-டீசிங் பண்ணினான் என்று பொய்க்குற்றஞ்சாட்டி கல்லூரியிலிருந்து வெளியேற்றுதல்
12 பஸ், மெஸ், ஆசிரியர்கள் அல்லது கல்லூரி நிர்வாகத்தின் மோசமான செயல்பாடுகளுக்கு/ நிர்வாகத்துக்கு எதிராக கூட்டமாக வெளியே வந்து அமைதியாக நின்றால் (கோஷம் போடவோ அல்லது எதிர்த்து பேசவேண்டியதோ இல்லை) 1.நிர்வாகத்தின் குண்டா படைகளான பேராசிரியர்களாலும், பிற தொழில்முறை குண்டாக்களாலும் தாக்கி விரட்டியடிக்கப்படுவார்கள்2. போலீஸ் வரவழைக்கப்பட்டு அடித்து விரட்டப்படுவார்கள்3. இரண்டு பேருக்கு மேல் கூடிப்பேசினால விரட்டியடிக்கப்படுவார்கள்4. முன்னணியிலிருந்த மாணவர்களை அடையாளம் காட்டச் சொல்லி பிற மாணவர்கள் மிரட்டப்படுவார்கள். காட்டிக் கொடுக்கவில்லையென்றால் இம்மாணவர்களும் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்படுவார் 5. முன்னணியிலிருந்த மாணவர்களை அடித்து, சட்டையைக் கிழித்து இடைநீக்கம் செய்வார்கள்
6. பல கல்லூரிகளில் இப்படி இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் பின்னர் விசாரணைக்குப்பின் வெளியேற்றப்படுவார்கள் அல்லது பெற்றோர்களை மிரட்டி பல பத்தாயிரங்களை அபராதமாக செலுத்த நிர்பந்திப்பார்கள்
13 வெளியேற்றப்பட்டாலோ அல்லது தானாக வெளியேறி வேறு கல்லூரி அல்லது படிப்பிற்கு சென்றால் நான்கு ஆண்டுக்கான மொத்த கல்லூரிக் கட்டணத்தை (விடுதி, பஸ் உட்பட) செலுத்த வேண்டும்.No dues வழங்க 6 மாதங்கள் இழுத்தடித்தல்சர்டிபிக்கட் வழங்காமல் இழுத்தடித்தல்இப்படி இழுத்தடிப்பது மூலம் மாணவனை உளவியல் ரீதியாக சிதைப்பது டிசி யில் மாணவனின் நடத்தையை மோசமாக எழுதுவது.
அந்த மாணவன் பின் எந்த கல்லூரிக்கும் சென்றுபடிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்படுத்துதல்
எஸ்.ஆர்.எம். பச்சமுத்து
எஸ்.ஆர்.எம். பச்சமுத்து
மேலே பட்டியலிடப்பட்ட மாணவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் எல்லா கல்லூரிகளாலும் ஒருமித்த கருத்துடன் ‘குற்றங்கள்’ எனத் தீர்மானிக்கப்பட்டவை. அவற்றிற்கான தண்டனைகளை அனைத்து கல்லூரிகளிலும் சிற்சில வேறுபாடுகளுடன் (அதாவது முன்னப்பின்ன) அமுல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே சோவும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளும் கூறுவது போல ”உடை விஷயத்தில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வர முயற்ச்சிக்கிற கல்லூரிகளுக்கும் நிர்வாகிகளுக்கும்” மாணவர்களுக்கு ஒழுக்க விழுமியங்களை கற்றுக் கொடுப்பது நோக்கமல்ல; மாறாக மாணவர்களையும் பெற்றோர்களையும் ஒழுக்கம் என்ற பெயரில் பகற் கொள்ளையடித்து தன் கல்லாவை நிரப்புவது தான் என்பது தெள்ளத் தெளிவு.
இத்தகைய தண்டனைகளால் மாணவன் ஒழுக்கமாக நடக்க வேண்டும் என்பதை விட தன் கல்லா நிரம்புவதையே குறிக்கோளாகக் கொண்ட கல்லூரி நிர்வாகம், இந்த தண்டனைகளை மாணவர்களும் பெற்றோர்களும் எவ்வித கேள்வியோ ஆட்சேபணையோ இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது. மீறி மாணவன் தன் பக்க நியாயத்தை எடுத்துச் சொல்ல விழைந்தால், மிக மோசமான பின்விளைவுகளை அவன் சந்திக்க வேண்டியிருக்கும்.
ஏ சி சண்முகம்
ஏ சி சண்முகம்
இந்த விளைவுகள் உடல்ரீதியான தாக்குதலிலிருந்து கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டு எதிர்காலம் சீரழிக்கப்படுவது வரை எந்த அலைவரிசையில் வேண்டுமானாலும் இருக்கலாம். இத்தகைய பின்விளைவுகளின் பயங்கரத்துக்கு பயந்து பெற்றோர்களும் கடனை வாங்கியாவது கல்லூரி முதலாளிகளுக்கு தண்டம் அழுகிறார்கள். எல்லா கல்லூரிகளும் மாணவர் சேர்க்கையின் போதே பெற்றோர்களிடம் தங்கள் பிள்ளைகள் எந்த மாணவர் இயக்கத்திலும் ஈடுபட மாட்டார்கள்; மீறினால் வெளியேற்றப்படுவார்கள் என எழுத்துபூர்வமாக உறுதி வாங்குகிறார்கள். எந்த பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் இயக்கங்கள் செயல்படுவதில்லை என்பதால் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அனுபவிக்கும் கொடூரமான சித்ரவதைகள் வெளியுலகத்திற்கு தெரிவதேயில்லை.
அதனாலேயே பள்ளி மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைகள் வெளிச்சம் கண்ட அளவில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட கல்லூரி மாணவர்களின் அவல வாழ்க்கை மனித உரிமை ஆர்வலர்களின் பார்வைக்கோ, ஊடகங்களின் பார்வைக்கோ வந்ததில்லை. இந்த சித்திரவதைகளின் கொடுமை தாங்காமல் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட போதும் கூட, எஸ்.எம்.கே. போம்ரா கல்லூரி மாணவி அனித்ரா தற்கொலை  போன்ற ஒரு சில மட்டுமே வெளியுலகத்திற்கு தெரியவருகிறது.
வி.ஐ.டி விஸ்வநாதன்
வி.ஐ.டி விஸ்வநாதன்
ஒரு பேராசிரியரைக் கொலை செய்ததற்காக அம்மூன்று மாணவர்களும் இன்றைக்கு களி தின்கிறார்கள்; ஆனால் பல நூறு மாணவர்களை தற்கொலையை நோக்கி தள்ளிய எந்த கல்வி முதலாளியோ பேராசிரியரோ இதுவரை சட்டத்தின் சட்டகத்திற்குள் கொண்டுவரப்பட்டதில்லை என்ற உண்மை இன்றைய ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. “மாமியார் உடைச்சா மண்சட்டி மருமக உடைச்சா பொன்சட்டி.”
தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் கட்டணக்கொள்ளையை தடுத்து நிறுத்த வக்கற்ற அண்ணாப் பல்கலைக்கழகமும், தமிழ்நாடு உயர்கல்வித்துறையும், தமிழக அரசும் தான், இத்தகைய கல்லூரிகளின் மானுட விரோத சமூக விரோத நடவடிக்கைளுக்கு நேராக கண்களை இறுக மூடிக்கொண்டிருக்கின்றன. இதுபோன்று பாதிக்கப்பட்ட மௌண்ட் சியோன் பொறியியல் கல்லூரி மாணவி செல்ல காயத்திரிக்கு மதுரை உயர்நீதி மன்றம் வழங்கிய நீதியின் இலட்சணத்தைப் பார்த்தால்  ஒவ்வொரு மாணவனும் இப்படி நீதிமன்ற வாசலைத் தட்டுவதை விட இன்ஃபன்ட் ஜீஸஸ் மாணவர்களைப் போல கொலைகாரர்களாக மாறுவதில் உள்ள நியாயம் நமக்குப்புரியும்.
“However, Mr.N.Balakrishnan, the learned counsel appearing for the fourth respondent contended that if the student leaves a course in the midstream, he would be entitled to the return of the Certificates, only after paying the tuition fee for the remaining incomplete period of the course.  The learned counsel also contended that if a student leaves a College in the midstream, the seat goes waste and that the fixation of fee for every student is actually based upon the cost worked out before the Fee Fixation Committee. Once the particular fee is fixed for a particular academic year, the students admitted in that academic year are obliged to pay the same fee, till the end of the course every year.  Similarly, there is an obligation casts upon the College to charge only those fees.  In such circumstances, it is implicit that the students like the petitioner’s daughter will have to pay the fees for the rest of the course of study for collecting the Certificates. I would not venture to get into that controversy, namely, whether the College is entitled to collect the balance of fees or not.  The main grievance of the petitioner is about the Certificates of her daughter. Those Certificates are not like fixed deposit receipt on which, banks claim a general lean in terms of Section 171 of the Contract Act. Therefore, the Certificates cannot be retained at any rate. Hence, this writ petition is allowed directing the fourth respondent to return all the original Certificates deposited by the petitioner forthwith. No costs.”
இதுதான் மேற்குறிப்பிட்ட தீர்ப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்கப்பகுதி.
எஸ்.ஏ.ராஜா
எஸ்.ஏ.ராஜா
ஒரு பக்கம் கல்வி என்பது வியாபாரமாக்கப்பட்டு, மாணவர் சமூகமும் அவர்களின் பெற்றோர்களான பொதுமக்களும் இக்கல்வி முதலாளிகளால் பொருளாதார ரீதியாக வரைமுறையின்றி சுரண்டப்பட்டு, உளவியல் ரீதியாக காயடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த அப்பட்டமான பயங்கவாதத்திற்கெதிராக எவ்விதத்திலும் (சட்ட ரீதியாகவோ, ஜனநாயகரீதியாகவோ) போராட முடியாமல் முட்டுச்சந்தியில் திணறிக் கொண்டிருக்கிறது இந்த பொது சமூகம். ஆனால் இதே கல்வி முதலாளிகள் தங்களை வள்ளல்களாகவும், புரவலர்களாகவும் முன்னிறுத்தும் போது இவர்களின் அல்லக்கைகளும் அடிமைகளுமான பேராசிரியர்களோ கல்விக்கண் திறக்கும் குருவாக தங்களை உருவகம் செய்து கொள்கிறார்கள். மாணவர்களும் தங்களை அத்தகையதொரு புனிதத்தோடு மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
குறிப்பாகக் கூறினால் ”நான் உன்னை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒட்டச் சுரண்டி காயடித்து அடிமையாக்குவேன். ஆனால் நீ எனக்கு எப்போதும் உரிய மரியாதை அளித்து, என்னை உனக்கு எஜமானனாகவும் குருவாகவும் அங்கீகரித்து எவ்விதக் கேள்விக்கும் உட்படுத்தாமல் ஏற்றுக் கொண்டு எனக்கு வர வேண்டியதைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நீ உயிர் வாழ முடியாது” என்பது தான். கார்ப்பரேட் பார்ப்பான் துக்ளக் ராமசாமியும் இந்த கல்விவள்ளல்களும் ஒன்றுசேரும் இடமும் இது தான்.
தனியார்மயம், தாராளமயம் போன்ற ஏகாதிபத்திய பயங்கரவாதத்திற்கு பெரும்பான்மையான உழைக்கும் மக்களும், மாணவர்களும், விவசாயிகளும், எல்லா தரப்பு மக்களும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். செத்த பிணத்தை உறிஞ்சி வாழும் சாறுண்ணிகளைப் போன்று ஏழைகளின் நிணத்தையும் வியர்வையும் உறிஞ்சி வாழ்கிற இக்கூட்டம் கூச்ச நாச்சமின்றி தனக்கான சமூக அந்தஸ்தையும் அங்கீகாரத்தையும் சுரண்டப்படும் வர்க்கங்களே முன்வந்து மனமுவந்து கொடுக்க வேண்டும் என்கிறது; மீறினால் மிரட்டி, சட்டம் போட்டு நிலை நாட்ட முனைகிறது.
எ.வ. வேலு
எ.வ. வேலு
சமூக அந்தஸ்து, அங்கீகாரம் போன்றவைகளின் பொருளாதார, சமூக அடித்தளத்தை இந்த சாறுண்ணிக் கும்பலே அடித்து உடைத்து விட்டு ”எனக்கும் வேணும் மண்டகப்படி” என்று சொன்னால் தினம் தினம் தான் சுரண்டப்படுவதைக் கண்கூடாகப் பார்க்கும் மக்களும் மாணவர்களும் எப்படி அதை ஏற்றுக் கொள்வார்கள். அதனால் தான் மாணவன் கேட்கிறான் “நான் காசு கொடுக்கிறேன். நீ அந்த காச வாங்கி நக்கிக்கிட்டு பேசாம இருக்க வேண்டியது தானே. நான் என்ன செய்யணும், எப்பிடி நடக்கணும் என்கிறத தீர்மானிக்க நீ யாரு?’. இந்த நியாயமான கோபத்தை ஜனநாயக முறைகளில் வெளிப்படுத்த வழியற்ற மாணவர் சமூகம் தான் இன்றைக்கு கொலை, தற்கொலை போன்ற தனிநபர் தீர்வை நோக்கி தவிர்க்கமுடியாமல் போயிருக்கிறது; இன்னும் சரியாகச் சொன்னால் இந்த தீர்வை நோக்கி இவர்கள் தள்ளிவிடப்பட்டிருக்கிறார்கள்.
இதற்கு தார்மீகமான பொறுப்பை ஏற்கவேண்டிய இந்த பயங்கரவாதக் கும்பலோ ”’ஜீரோ டாலரன்ஸ்’ என்கிற ‘சிறு தவறையும் அனுமதிக்காத கண்டிப்பு’, மிலிட்டரி டிஸிப்ளின் போன்ற கொடூர வன்முறையையும் அடக்குமுறைகளையும் மேலும் மாணவர்களிடம் அமுல்படுத்த துணிகிறது. அம்மா தயவில் அதுவும் கூட நடக்கலாம்.
மாணவர்கள் சட்டத்தை மதிக்காமல் ‘ஈவ் டீசிங், அதிவிரைவாக இருசக்கர வாகனம் ஓட்டுதல்” போன்ற சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டி “மிலிட்டிரி டிஸிப்பிளினையும்”, “ஜீரோ டாலரன்ஸையும்” போன்ற கொடூர தண்டனைகளை அமுல்படுத்த அச்சாரமிடுகிறார் சோ. கூடங்குளம், கல்வி தனியார்மயத்திற்கெதிரான மாணவர் போராட்டம், ஈழப்பிரச்சனை, மூவர் தூக்கு போன்ற மக்கள் போராட்டங்களின் போதும் கூட சட்டத்தை மதிக்காமல் போராடுவதை வன்மையாக கண்டித்து தலையங்கம் தீட்டியது துக்ளக். ஆனால் டான்ஸி வழக்கு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் வன்முறை, வேளச்சேரி என்கவுண்டர், அப்ஸல் குரு தூக்கு, இஸ்ரத் ஜகான் போலி மோதல் கொலை போன்ற சட்ட விரோத அரச மற்றும் இந்துத்துவ பயங்கரவாதங்களை நியாயப்படுத்தி தலையங்கங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறது. சோவைப் பொறுத்தவரை சட்டம் என்பது வெகு மக்களுக்கானது; அவர்களை ஒட்டச் சுரண்டும் போது அவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டாமல் இருக்க உபயோகிக்கப்படுத்த வேண்டிய ஆயுதம்.
மாணவர்களை ஒட்டச் சுரண்டுவது கல்வி முதலாளிகளின் நோக்கமென்றால் அவர்களை அரசியல் ரீதியாக வளர விடாமல் காயடிப்பது ஆளும் வர்க்கத்தின் நோக்கம். அதைத்தான் பயங்கரவாதி சோ வெளிப்படையாக பேசி எழுதி வருகிறார். இன்றைக்கு ஒரு கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக எழுந்துள்ள மாணவர்கள் நாளையே இந்த அநீதியான சமூகத்திற்கும் எதிராகவும் அரசியல் ரீதியாக எழுவார்கள். அப்போது சோ உள்ளிட்ட ஆளும் வர்க்கத்திற்கு எதிராக அவர்களும் “ஜீரோ டாலரன்ஸ்” முறையைத்தான் கடைபிடிப்பார்கள்.
- ராஜன். vinavu,com

கருத்துகள் இல்லை: