சனி, 26 அக்டோபர், 2013

விரைவில் 24 மணி நேர சீரான மின்சாரம்* சட்டசபையில் ஜெ., உறுதி ! நல்ல காலம் வருது ! டமுகடிப்பான் டியாலோ !

சென்னை:”தொழில் கூடங்கள், விவசாயம் மற்றும் வீட்டு இணைப்புகள் என, அனைவருக்கும், 24 மணி நேரமும் சீரான மின்சாரம் கிடைக்கும் சூழலை, மிக விரைவில் உருவாக்கிக் காட்டுவோம்,'' என, முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் பாலபாரதி, ஆறுமுகம் ஆகியார் தமிழக மின் நிலைமை குறித்து, சட்டசபையில் நேற்று கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதில் அளித்து, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:அ.தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்து, கடந்த இரு ஆண்டுகளில், மேட்டூர் அனல் மின் திட்டத்தில், 600 மெகாவாட் திட்டம் விரைந்து முடிக்கப்பட்டதால், 500 மெகவாட் மின்சாரம் தற்போது கிடைக்கிறது. அதேபோல், வடசென்னை அனல் மின் திட்டத்தின், இரண்டாவது அலகும் விரைந்து முடிக்கப்பட்டு, 300 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. விரைவில், இந்த உற்பத்தி, 600 மெகாவாட்டை எட்டும்.
வல்லூர் மின் திட்டம் முடிக்கப்பட்டு, 1,700 மெகாவாட் கிடைக்கிறது. -

ராயன் : Singapore,சிங்கப்பூர் அம்மா நேற்று சட்ட சபையில் தனது சாதனை என்று கூவியது எல்லாம் முக்கால் வாசி தாத்தா ஆட்சியில் அவரால் செய்யப்பட்டவை.. எங்க கொட நாட்டுலேயா மம்மி 24 மணி நேரமும் மின்சாரம்...தைரியம் இருந்தால் மினி பஸ்ஸில் ரெட்டை இல்லை போட்டு சட்டத்துக்கு புறம்பாக கேவலமாக விளம்பரம் செய்து இருப்பதை சட்ட சபையில் விவாதித்து இருக்க வேண்டும்.. அதற்கு திராணி இல்லை...

இத்திட்டங்கள் தவிர, பிற மாநிலங்களிலிருந்து மூன்றாண்டுகளுக்கு, 500 மெகாவாட் மின்சாரம் ஜூன் மாதம் முதல் கொள்முதல் செய்யப்படுகிறது. நீண்ட கால அடிப்படையில், 1,000 மெகாவட் மின்சாரத்தை சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்ய, ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.

பிற மாநிலங்களிலிருந்து மின்சாரத்தைக் கொண்டு வர, வழித் தடங்களை அமைக்கும் வேலையில், மகாராஷ்டிராவின் சோலாப்பூர் முதல் கர்நாடகம் ரெய்சூர் வரை, 765 கிலோ வோல்ட் திறன் கொண்ட மின் வழித்தடங்கள் அமைக்கப்படுகிறது.இப்பணிகள், 2014ம் ஆண்டு முடிவடையும். இதன்மூலம், கொள்முதல் செய்யும் மின்சாரத்தை முழுமையாகப் பெறமுடியும். தென்மேற்கு பருவமழை சிறப்பாக பெய்த காரணத்தால், நீர்மின் உற்பத்தி முழு அளவை எட்டியுள்ளது. வடகிழக்கு பருவமழை சிறப்பாக இருக்கும் என, வானிலை மையம் கூறியுள்ளதால், மின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும். அக்., 1ம் தேதி, இதுநாள் இல்லாத வகையில், உச்ச மின் தேவையான, 12,118 மெகாவாட் மின்சாரத்தை மின் வாரியம் பூர்த்தி செய்துள்ளது.

மின்வெட்டை படிப்படியாகக் குறைக்கும் வகையில், உயரழுத்த ஆலைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மாலை, 6:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரையுள்ள நேரம் நீங்கலாக, பிற நேரங்களில் மின் வெட்டு, 40 சதவீதத்திலிருந்து, 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.வீட்டு உபயோகங்களுக்கு, சென்னையில் இரண்டு மணி நேரம், பிற பகுதிகளுக்கு மூன்று மணி நேரம் மின்வெட்டு அமலில் இருந்தாலும், "மின்வெட்டே இல்லை' என்பது தான் யதார்த்த நிலை. மின் தட்டுப்பாடு விரைவில் நீங்கி, தங்கு தடையின்றி அனைத்துத் தரப்பினருக்கும் விரைவில் மின்சாரம் கிடைக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


'திவாலான மின் வாரியத்தை மீட்டுள்ளோம்':

திவாலாகும் நிலைமையிலிருந்து, மின் வாரியத்தை காப்பாற்றியுள்ளோம்,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.சட்டசபையில், மின் நிலைமை குறித்த, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:தி.மு.க., ஆட்சியில், மின் துறையை பாழ்படுத்தி, திவாலாகும் நிலைக்கு ஆக்கிவிட்டனர். 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, கடனையும் மின் வாரியத்துக்கு ஏற்படுத்தி விட்டனர். தமிழக மின் வாரியத்துக்கு கடன் கொடுக்கக் கூடாது என, அனைத்து வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கி உத்தரவும் போட்டது; இதனால், நானும் கவலைப்பட்டேன். ஆனால், இதை ஒரு சவாலாக எடுத்து, மின் வாரியத்தின் கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்த, அரசே பொறுப்பேற்று, கடன் முழுவதையும் அடைக்கும் அளவிற்கு நிலைமையை மாற்றியுள்ளோம். எனவே, "தமிழகம் மின் பற்றாக்குறையிலிருந்து மீளுமா' என, இனி யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. மின் பற்றாக்குறையை, 99 சதவீதம் தீர்த்து விட்டோம். இன்னும், 1 சதவீதம் தான் குறை உள்ளது; அதையும், இந்தாண்டு இறுதிக்குள் தீர்த்து விடுவோம்.இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.


மத்திய அரசு மறுப்பு; ஜெ., புகார்:

""தூத்துக்குடியில் அமைக்கப்படும் அனல் மின் நிலைய நிலத்துக்கு, அனுமதி வழங்க மத்திய அரசு மறுக்கிறது; இதனால், சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளோம்,'' என, முதல்வர் சட்டசபையில் தெரிவித்தார்.சட்டசபையில், மின் நிலைமை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அவர் பேசியதாவது:நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து, தூத்துக்குடியில், 500 மெ.வா., திறனில் இரண்டு அலகுகள் கொண்ட அனல் மின் நிலையத்தை, தமிழக அரசு அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டத்துக்காக, வ.உ.சி., துறைமுகத்திடமிருந்து நிலம் பெறப்பட்டுள்ளது. இந்த நிலைத்தை, காடுகள் என, வருவாய்த் துறை ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. அதை மறுவகைப்படுத்த, மத்திய அரசு இதுவரை அனுமதி தரவில்லை.இதனால், நிலத்தை மறுவகைப்படுத்த, சுப்ரீம் கோர்ட்டை தமிழக அரசு அணுகியுள்ளது. "நியாயமாக மக்களுக்கு, பயனளிக்கக் கூடிய மின் திட்டத்துக்கு, நிலத்தை வகைப்படுத்திக் கொடுங்கள்' என, மத்திய அரசைக் கேட்டால், காங்கிரஸ் தலைமையில் செயல்படும் மத்திய அரசு, அனுமதி தர மறுக்கிறது.இவ்வாறு, ஜெயலலிதா கூறினார். dinamalar.com 

கருத்துகள் இல்லை: