முதல் 2007 வரை தயாநிதிமாறன் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பதவி
வகித்தார். அவரது பிரத்யேக் பயன்பாட்டிற்காக 323 அதிநவீன தொலைபேசி
இணைப்புகள் அளிக்கப்பட்டன. ஆனால் இந்த தொலைபேசி இணைப்புகளை தனது சகோதரர்
கலாநிதிமாறன் நடத்தி வரும் சன் டிவி பயன்பாட்டிற்காக தயாநிதிமாறன்
ஒப்படைத்துவிட்டார். இது அதிகார துஷ்பிரயோகமாகும்.
இதனால்
அரசுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு 440 கோடியாகும் என்று
மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரபல ஆடிட்டர் குருமூர்த்தி
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். சிபிஐ அதிகாரிகள் இந்த
விவகாரத்தில் மெத்தனமாக செயல்பட்டனர். உச்சநீதிமன்றம் கண்டித்ததை
தொடர்ந்து இந்த வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.தயாநிதிமாறனின்
அதிகார துஷ்பிரயோகத்திற்கு பிஎஸ்.என்.எல் அதிகாரிகள் கே.பிரம்மநாதன்,
எம்.பி.வேலு சாமி ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த அதிகாரிகள்
மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நீதிபதி
முன்னிலையில், வெகு விரைவில் குற்ற்ப்பதிவு நிகழ்த்தப்படும் என்று
உறுதியாக தெரிகிறது. சிபிஐ அதிகாரிகள் இதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனால் கலாநிதிமாறனுக்கும், தயாநிதிமாறனுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மாறன்
சகோதரர்கள் மற்றொரு பிரச்சனையிலும் மாட்டிக்கொண்டுள்ளனர்.
சென்னையைச்சேர்ந்த பிர பல தொழிலதிபர் சிவசங்கரன் ஏர்செல் நிறுவனத்தை
நடத்தி வந்தபோது, அவருக்கு அலைபேசி சேவை உரிமம் அளிக்காமல் தயாநிதிமாறன்
இழுத்தடித்தார். மலேசிய தொழிலதிபரான அனந்ந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ்
நிறுவனத்திற்கு ஏர்செல்லின் பெரும்பாலான பங்குகளை விற்க வேண்டுமென்று
தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்துவந்தார்.கடும்
மன உளைச்சலுக்கு ஆளான சிவசங்கரன் தனது தொழி நிறுவனத்தை அனந்தகிருஷ்ணனிடம்
விற்றார். இதற்கு பிரதி உபகாரமாக சன் நெட்வொர்க்கில் அனந்தகிருஷ்ணன்
முதலீடு செய்தார். சன் நெட் வொர்க் பங்குகளை வாங்க சந்தை மதிப்பை விட
அதிக தொகையை அனந்தகிருஷ்ணன் கொடுத்துள்ளார். இவ்விவகாரம் குறித்தும்
சிபிஐ அதிகாரிகள் முனைப்புக்காட்டி வருகிறார்கள்.மலேசியாவில்
இருந்து சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இன்னும் சில தகவல்களை
பெறும் முயற்சியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கையும்
விரைவுபடுத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளதால் இருதலைக் கொள்ளி
எறும்புகளாக மாறன் சகோதரர்கள் தவிக்கிறார்கள் nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக