தனது கணவரை கொலைசெய் துவிட்டு, இலங்கை படையினர்தான் கொன்றனர் என தெரிவித்து பிரித்தானிய பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்த, இலங்கைப் பெண்ணாண ஹம்சத்வாணியை சர்வதேச பொலிஸார் தேடி வருவதுடன், இன்ரபோல் பொலிஸாரால் தேடப்படுகின்ற குற்றவாளிகளின் வரிசையில் இவரின் பெயரும் சேர்க்கப்பட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலையூற்று பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஈஸ்வரதாசன் கேதீஸ்வரன் (வயது 28) என்ற கிரிக்கெட் வீரர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலைசெய்யப்பட்ட குறித்த நபரான ஈஸ்வரதாசன் கேதீஸ்வரன யுத்தம் உச்சம் பெற்று இருந்த 2006 ஆம் ஆண்டுப் பகுதியில் பிரித்தானியாவுக்கு சென்றிருந்தார் அப்போது இலண்டனில் உள்ள கிறிக்கெற் விளையாட்டு கழகம் ஒன்றில் விளையாட்டு வீரராக இணைந்துகொண்டார் போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசால் நாடு கடத்தப்பட்டார். பிரித்தானிய அரசால் நாடு கடத்தப்பட்டதையடுத்து இலங்கைவந்த கேதீஸ்வரன் பல வருடங்களாக காதலித்து வந்த ஹம்சத்வாணியை திருமணம் செய்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், 30 வயதான விமானியொருவராவார். மேற்படி விமானி, இங்கிலாந்துக்குச் சென்றிருந்த போது அங்கு தங்கியிருந்த கிரிக்கெட் வீரரின் மனைவியுடன் ஏற்பட்டிருந்த கள்ளத் தொடர்பே இந்த படுகொலைக்கு காரணம் என விசாரணைகள் மூலம் தெரியவந்ததுடன், கேதீஸ்வரனை படுகொலை செய்வதற்காக அவரின் மனைவி ஹம்சத்வாணிதான் 1750 பவுண் கொடுத்தார் என விசாரணையில் இருந்து தெரியவந்தமை குறிப் பிடத்க்கது.
தனது கள்ளக்காதலனை வைத்து தனது கணவரை கொலைசெய்துவிட்டு இலங்கை படையினர்தான் கொன்றனர் என நாடகமாடி பிரித்தானிய பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்த ஹம்சத்வாணி உலகிலுள்ள தமிழ்மக்களின் அனுதாபத்தை பெறுவதற்கு முயற்சித்துள்ளதுடன், இரு நாடகளையும் ஏமாற்றியுள்ளார் என்பது தெட்டத் தெளிவாக புரிகின்றது ilangainet.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக