40க்கும் மேற்பட்டவரால் பலாத்காரம் செய்யப்பட்ட
சூரியநெல்லி சிறுமி விவகாரம் : பி ஜே குரியன் மீதான வழக்கு தள்ளுபடி
கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த சூரியநெல்லி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 1996–ம் ஆண்டு கடத்தப்பட்டு 40–க்கும் மேற்பட்டவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சிறுமியை கற்பழித்தவர்களில் அரசியல் பிரமுகர்கள், முக்கிய தலைவர்களும் உண்டு என்றும் அப்போது குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக இப்போது டெல்லி மேல்சபை தலைவராக இருக்கும் பி.ஜே. குரியனுக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு உண்டு என்று கூறப்பட்டது.இதை மறுத்த குரியனை இந்த வழக்கில் இருந்து சுப்ரீம் கோர்ட் விடுவித்தது. அதன் பிறகு சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான தர்மராஜன் என்பவர் பத்திரிகைகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பு பேட்டி அளித்தார்அதில், குரியன் இருந்த விருந்தினர் மாளிகைக்கு சிறுமியை காரில் அழைத்துச் சென்றதாகவும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில் குரியனுக்கும் தொடர்பு உண்டு என்றும் கூறினார். இதனால் இந்த வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியும் இந்த வழக்கில் குரியனையும் சேர்க்கக்கோரி பீர்மேடு, தொடுபுழா கோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகளை பீர்மேடு, தொடுபுழா கோர்ட்டுகள் தள்ளுபடி செய்தது.
இனி குரியன் சேட்டனை யார் தட்டி கேட்பது ?

இதை
எதிர்த்து பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் கேரள ஐகோர்ட்டில் அப்பீல்
செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த கேரள
ஐகோர்ட்டு இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கும் தர்மராஜன் கூறியதை
வைத்து குரியன் மீது கோர்ட்டு நடவடிக்கை எடுக்க முடியாது.
ஏற்கனவே
இந்த வழக்கில் இருந்து குரியனை சுப்ரீம் கோர்ட்டு விடுவித்தது. எனவே இந்த
வழக்கில் கீழ் கோர்ட்டுக்கள் பிறப்பித்த உத்தரவு சரிதான். எனவே குரியன்
மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்த இந்த மனு தள்ளுபடி
செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டது. nakkheeran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக