கர்நாடக
மாநிலம் மங்களூரில் இருந்து சிமோகாவுக்கு 300 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்
ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரி மங்களூர்–சிமோகா
சாலையில் ஹுலிக்கால் என்ற வனப்பகுதியில் ஹேஸ்கோட் என்ற கிராமம் அருகே
சென்ற போது, லாரியில் இருந்த சிலிண்டர்களில் தீப்பொறி ஏற்பட்டு ஒன்றன் பின்
ஒன்றாக வெடிக்க தொடங்கியது.உடனே
லாரி டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோர் லாரியை நிறுத்தி விட்டு
மலைப்பகுதிக்கு சென்று தப்பி ஒடினர். லாரியில் இருந்த 300 சிலிண்டர்கள்
ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெடித்து சிதறியது, இது அந்த பகுதியில் தொடர்
குண்டு வெடித்தது போன்ற ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த பகுதி
மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது.இதுபற்றி
தகவல் கிடைத்ததும் போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு
வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் மழையும்
கொட்டியதால் தீவிபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டது.அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதமும் பொருட்சேதமும் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்து காரணமாக மங்களூர்–சிமோகா சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக