ஜான்சி :உ.பி.யில் நடந்த பொதுக்கூட்டத்தில், ‘‘காங்கிரசுக்கு 60 ஆண்டுகள்
கொடுத்தீர்கள். எங்களுக்கு 60 மாதங்கள் தாருங்கள். உங்கள் தலையெழுத்தை
மாற்றிக்காட்டுவோம்’’ என்று நரேந்திரமோடி சூளுரைத்தார்.
கஜானா மீது கை வைக்க முடியாது
பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நாடு முழுவதும் பயணம் செய்து, பாராளுமன்றத் தேர்தலுக்காக ஆதரவு திரட்டி வருகிறார். உத்தரபிரதேச மாநிலம், பந்தல்காண்ட் பகுதியில் நடந்த கட்சியின் ‘வெற்றி முழக்கம்’ பொதுக்கூட்டத்தில் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நான் பிரதமர் ஆக இருக்க விரும்பவில்லை(அடேங்கப்பா நம்புறோம் நம்புறோம்)
அப்போதுதான் நாட்டின் கஜானா மீது யாரும் கை வைக்க முடியாது.
ஏழைகளின் கண்ணீர் துடைப்பேன் கஜானா மீது கை வைக்க முடியாது
பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நாடு முழுவதும் பயணம் செய்து, பாராளுமன்றத் தேர்தலுக்காக ஆதரவு திரட்டி வருகிறார். உத்தரபிரதேச மாநிலம், பந்தல்காண்ட் பகுதியில் நடந்த கட்சியின் ‘வெற்றி முழக்கம்’ பொதுக்கூட்டத்தில் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நான் பிரதமர் ஆக இருக்க விரும்பவில்லை(அடேங்கப்பா நம்புறோம் நம்புறோம்)
அப்போதுதான் நாட்டின் கஜானா மீது யாரும் கை வைக்க முடியாது.
இங்கே அரசியல் ஆதாயத்துக்காக நான் கண்ணீர் சிந்த விரும்பவில்லை. நான் ஏழை மக்களின் கண்ணீரைத் துடைக்கத்தான் இங்கே இருக்கிறேன்.
தனது பாட்டி படுகொலை செய்யப்பட்ட நினைவுகளை இளவரசர் (ராகுல் காந்தி) நினைவுகூர்ந்து பேசி இருக்கிறார். தனது சொந்த மெய்க்காவலர்களால் அவர் கொல்லப்பட்டபோது, தான் மிகுந்த கோபத்தில் இருந்ததாக அவர் கூறி உள்ளார். அந்தக் கோபத்தில்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்களா? அந்த இனக்கொலையில் இன்னும் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லையே?
மன்னிப்பு கேளுங்கள்
அவர் (ராகுல்காந்தி) யார்? சாதாரண எம்.பி. தானே? ஆனால், எதற்காக உளவுத்துறை அதிகாரிகள் அவரிடம் உளவுத்தகவல்களை கூறுகின்றனர்? அவர்கள்தான் (காங்கிரஸ்) ஆட்சியில் இருக்கிறார்கள். இதில் அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐ.எஸ்.ஐ. தொடர்பு கொண்ட இளைஞர்களின் பெயர்களை ராகுல் வெளியிட தயாரா அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது அத்தகைய குற்றச்சாட்டுக்களை கூறி, அவர்களின் ஒருமைப்பாடு குறித்து அவதூறு குற்றச்சாட்டு சொன்னதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஜான்சி ராணி போல...
ராகுல் காந்தி ஏழை மக்களின் வீடுகளுக்கு செல்கிறார். கடந்த 60 ஆண்டுகளாக அவர்கள் ஏழைகளாக இருக்கின்றனர். அப்படியென்றால் ராகுல் காந்தி, தனது மூதாதையர்களின் தவறான செய்கைகளை எடுத்துக்காட்டுகிறாரா?
ஆங்கிலேயர்கள் மூர்க்கத்தனமாக பலத்தை பிரயோகித்தபோதும் நான் ஜான்சியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று ஜான்சி ராணி குரல் கொடுத்தார். நாங்கள் எங்கள் நாட்டை ஊழல்வாதிகளுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்.
டீ விற்றவர் பிரதமர் வேட்பாளர்
ஓடும் ரெயில்களில் டீ விற்ற வியாபாரியை பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுத்து இருக்கிறது. அதுதான் பாரதீய ஜனதாவின் நல்லொழுக்கம், கோட்பாடு.
ஆனால் வறுமையை காங்கிரஸ் எள்ளி நகையாடுகிறது. இளவரசர், ‘இதுவரை அரை ரொட்டி சாப்பிட்டு வந்தீர்கள், இப்போது உணவு பாதுகாப்பு சட்டம், முழு ரொட்டியைத் தரும்’ என்கிறார். 60 ஆண்டுகளில் வயிறாற சாப்பிட வைப்பதை விட, ஒரு ரொட்டி தருவதாக வாக்குறுதி அளிக்கிறார்கள். அப்படியென்றால் ஒரு தட்டு நிறைய சாப்பாடு கிடைக்க வேண்டுமென்றால், அதற்கு இன்னும் 100 ஆண்டுகள் காத்திருக்க ண்டும்.
60 மாதங்கள் தாருங்கள்
அவர்களுக்கு (காங்கிரசுக்கு) 60 ஆண்டுகள் கொடுத்தீர்கள். எங்களுக்கு 60 மாதங்கள் மட்டுமே கொடுங்கள். நாங்கள் உங்கள் தலையெழுத்தை, நாட்டின் தோற்றத்தை மாற்றிக்காட்டுகிறோம்.
இவ்வாறு நரேந்திர மோடி கூறினார். dailythanthi.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக