தாம்பரம், அக். 24-தாம்பரம் மற்றும்
துரைப் பாக்கத்தில் ஒரே நாளில் 4 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம்
மற்றும் கிரீடம் உள்பட 20 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச்
சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு தாம்பரம்
மேற்கு தாம்பரம் பழைய ஸ்டேட் வங்கி
காலனியில் ஆர்டிஓ அலுவலகம் எதிரே அருள் தந்த விநாயகர் ஆலயம் உள்ளது. இந்தக்
கோயிலில் பட்டம்மாள் (70) என்பவர், தினமும் சுத்தம் செய்து தீபம் ஏற்றுவது
வழக்கமாம்.
நேற்று காலை கோயிலைத் திறக்க பட்டம் மாள்
வந்தபோது கோயிலின் பூட்டு உடைக் கப்பட்டு இருந்ததை கண்டு
அதிர்ச்சியடைந்தார். உடனே கோயில் நிர்வாகி கிருஷ்ணனுக்கு தகவல்
தெரிவித்தார். அவர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.
தாம்பரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு
விரைந்து வந்தனர். கோயில் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்
பட்டு பணமும், விநாயகருக்கு பூஜை காலங்களில் பயன்படுத்துவதற்காக
வைத்திருந்த வெள்ளி கிரீடம் உள்பட 21 கிலோ வெள்ளி பொருட் களையும்
கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு
கோயிலில் பதிவாகி இருந்த ரேகைகளைப் பதிவு செய்தனர். மேலும் காவல்துறையினர்
வழக்குப் பதிவு செய்து கொள்ளையடித்தவர்களைத் தேடி வருகின்றனர்.
தாம்பரத்தில்....
இதேபோல் தாம்பரம் திருநீர்மலை சாலையில்
மகமாயி அம்மன் கோயிலிலும் நேற்று முன்தினம் இரவு சில நபர்கள் புகுந்து
அம்மன் கழுத்தில் கிடந்த 2 கிராம் தங்க தாலியை
கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
துரைப்பாக்கத்தில்...
துரைப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில்
செங்கழுநீர் விநாயகர் கோயில் உள்ளது. இதையொட்டி அய்யப்பன், முருகன்
கோயில்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பூஜை முடிந்ததும்
கோயில் நடையை பூட்டிவிட்டு பூசாரி வேணு, வீட்டுக்கு சென்றுள்ளார்.
நேற்று காலை நடையை திறக்க முயன்றபோது
முடியவில்லை. அப்போதுதான் கிரில் கேட் அருகே வைக்கப்பட்டிருந்த கோயில்
உண்டியல் கடப்பாரை யால் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப் பட்டு இருந்தது
தெரிந்தது. சில்லரை காசுகள் சிதறிக்கிடந்தன. இதுபோல பக்கத்தில் உள்ள
முருகன் கோயில் உண்டியலும் கடப்பாரையால் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை
போயிருந்தது.
உடனே கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர் வழக்கு பதிந்து கொள்ளையரைத் தேடி வருகின்றனர்.
கிறிஸ்தவ கோயிலில்
உண்டியல் கொள்ளை
உண்டியல் கொள்ளை
திருவொற்றியூர் தியாகராயபுரத்தில்
கிறிஸ்தவ கோயில் உள்ளது. நேற்று அதிகாலை சர்ச் வளாகத்தில் உள்ள உண்டியல்கள்
உடைக்கப் பட்டு இருப்பதை அங்கு வந்த மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து திருவொற்றியூர் காவல்துறை
யினர் விரைந்து வந்து விசாரித்தனர். சிலுவைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த
இரும்பு உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது. 2 உண் டியல்களில்
ரூ.50ஆயிரத்துக்கு மேல் இருந்தி ருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
ஒரேநாளில் 4 கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ கோயிலில் நடந்த கொள்ளை சம்பவங்கள் அந்தந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக