சனி, 17 ஆகஸ்ட், 2013

மணப்பெண் தற்கொலை ! திருமணத்தை தடுத்த காதலன் தானும் திருமணம் செய்யாமல் ஏமாற்றினான்

நிச்சயம் செய்த திருமணத்தை காதலன் மணிகண்டன் தடுத்து நிறுத்தினான் பின்பு தான் திருமணம் செய்வதாக சொல்லி இந்த பெண்ணை ஏமாற்றி விட்டான் . மாப்பிள்ளையும் கைவிட்டதோடு, காதலன் மணிகண்டனும்  திருமணம் செய்ய மறுத்ததால் அப்பெண் விரக்தி அடைந்து தீமூட்டி தற்கொலை செய்துகொண்டார் ! இந்த பொறுக்கி மணிகண்டனுக்கு யாராவது தக்க தண்டனை கொடுக்கவேண்டும்  தற்கொலைஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர்
முத்து. இவரது மகள் ருக்குமணி (வயது 21). திருச்சியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த இவர் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். செந்துறையை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் மணிகண்டன் (24). இவரும் திருச்சியில் ருக்குமணி படித்து வந்த அதே கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு தெரிந்தது. இதை அவர்கள் கண்டித்தனர்.
இதற்கிடையே ருக்மணியின் பெற்றோர் வருகிற 26–ந்தேதி கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ருக்மணியை திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். இதனை அறிந்த மணிகண்டன் ருக்குமணியின் பெற்றோரிடம் ருக்குமணியை தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டுள்ளார்.
இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மணிகண்டன் திருமணம் நிச்சயம் செய்த மாப்பிள்ளைக்கு போன் செய்து தான் கடந்த 3 ஆண்டுகளாக ருக்குமணியை காதலிப்பதாக கூறியதாக தெரிகிறது.

இதனால் திருமணத்திற்கு பத்திரிக்கை அடித்து வினியோகித்த நிலையில் மாப்பிள்ளை திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால் வருகிற 26–ந்தேதி நடை பெற இருந்த திருமணம் தடைபட்டது. இதற்கிடையே மணிகண்டனை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது மணிகண்டன் ருக்குமணியை திருமணம் செய்து கொள்வதாக கடந்த 6–ந் தேதி அழைத்துச் சென்றார். ஆனால் அன்று இரவே ருக்குமணியை அவரது வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டார். அன்று மறுநாள் முதல் மணிகண்டனை காண வில்லை.
இந்த நிலையில் நேற்று காலை ருக்குமணி தனது காதலன் மணிகண்டனுக்கு போன் செய்து அழைத்துள்ளார். அதற்கு மணிகண்டன் தான் வர முடியாது என்று கூறியதோடு உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதாகவும் தெரிகிறது.
இதனால் விரக்தி அடைந்த ருக்குமணி தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினரும், அவரது தாயார் மலர்கொடியும் ருக்குமணியை மீட்டு அரியலூர் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரிடம் அரியலூர் மாஜிஸ்திரேட்டு மரண வாக்குமூலம் பெற்றார்.
இதற்கிடையே சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை ருக்குமணி பரிதாபமாக இறந்தார். நிச்சயம் செய்த மாப்பிள்ளையும் கைவிட்டதோடு, காதலனும் திருமணம் செய்ய மறுத்ததால் அப்பெண் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செந்துறை சப்இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து மணிகண்டனை வலைவீசி தேடி வருகிறார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: