ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

அரசின் கல்வி கட்டண விதி முறையை மீறி வசூல் வேட்டை அமோகம்

தனியார் மற்றும் சிறுபான்மையின ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில், அரசின் வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றபடவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் கல்வி கட்டண குழு நிர்ணயித்த, ஆண்டு கல்விக் கட்டணத்தை கண்டு கொள்ளாமல், மாணவர்களிடம் பெருந்தொகை நன்கொடையாக வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 3,000 பி.எட்., இடங்களும், தனியார் கல்லூரிகளில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.எட்., இடங்களும் உள்ளன.மாணவர் சேர்க்கையின் போது, பி.எட்., படிப்புகளில் அரசு கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 90 சதவீத இடங்களும், அரசு உதவி இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். பெறும் சிறுபான்மையினர் கல்லூரிகளில், 50 சதவீதபரிந்துரையின்படி, இவை, இட ஒதுக்கீட்டு அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும் என, அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்துள்ளது.
ஆனால், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அரசு உதவி பெறும், சிறுபான்மை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதில்லை.தனியார் கல்வியியல் கல்லூரிகளில், பி.எட்., படிப்புக்கு அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதை தடுக்க, நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் கமிட்டி 47 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான பணிகள் துவங்கப்படவில்லை. ஆனால், பெரும்பாலான தனியார் கல்வியியல் கல்லூரிகளிலும் உள்ள >இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன. இக்கல்லூரிகளில், ஆயிரம் முதல் இரண்டு லட்ச ரூபாய் வரை என, அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு அதிகமாக கட்டணமாக வசூலிக்கப்படுவதாக, மாணவர்கள் குற்றச் சாட்டுகின்றனர்.அதிக கட்டணம் வசூலிக்கும், தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் மீது, அரசு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்வியியல் கல்லூரிகள் மீது புகார் செய்யவோ, நடவடிக்கை எடுப்பதற்கோ இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால்,லட்சக்கணக்கில் விலை போகும் சீட்களை வாங்க முடியாமல், ஏழை மாணவர்கள் பலர் பரிதவிக்கின்றனர்.

இதுகுறித்து, கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி கூறுகையில், ""தனியார் கல்வியியல் கல்லூரிகளில், அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து, இதுவரை எந்தவித புகாரும் வரவில்லை. புகார்கள் வரும் பட்சத்தில், அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

புகார் வந்தால் தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற, சிவப்பு நாடா முறை மாறும் வரை, தமிழகம் முன்னேற்றம் காண்பது அரிதே.dinamalar.com

கருத்துகள் இல்லை: