தேர்தலின் போது
விலையில்லா பொருட்கள் அறிவிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் தலையிடு வதற்கு
முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இது
குறித்து தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், ’’ஜனநாயக
நாட்டில் கொள் கைகள், நோக்கங்கள் வகுக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு.
ஆட்சிக்கு வரும்போது செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்த கருத்தை
உருவாக்க சுதந்திரம் உண்டு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் கட்சிகளின்
அறிக்கைகளை கட்டுப்படுத்துவதில்லை. தேர்தல்
அறிக்கைகளை வெளியிட கட்சிளுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும். தங்களது
பிரதிநிதிகளை தேர்ந் தெடுப்பதில் மக்களுக்கு உரிமை உண்டு. தேர்தல்
அறிக்கையில் விலையில்லா பொருட்கள் வழங்குவது குறித்த கட்டுப்பாடு ஏழைகள்
முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் . ஏழைகள்
முன்னேற்றத்துக்கான நடவடிக்கையை இலவசங்கள் என கூறுவது பொருத்தமானதல்ல.
சமுதாய ஏற்றதாழ்வுகளை போக்கவே அரசால் திட்டங்கள் வகுக்கப்படுகிறது. ஜனநாயக
நாட்டில் தீர்மானி க்கும் உரிமை மக்களுக்கு தான் உண்டு. தேர்தல் ஆணையம்
போன்ற அமைப்புகள் தலையிடக்கூடாது’’ என கூறியுள்ளார்; nakkheeran.in<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக