வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

விஜயின் latest பஞ்சு டயலாக்: தெரியலை புரியலை நானில்லை அவரில்லை ! தலைவா படக்குழுவின் விபரமான பேட்டி !


விஜய் நடித்து, தமிழகத்தில் வெளியாக
காத்திருக்கும் ‘தலைவா’ படம்
தொடர்பாக விஜய் வீடியோ அறிக்கை ஒன்றை விட்டு, “தலைவா வெளியாக கருணை புரிக முதல்வா” என கோரிக்கை விட்டுவிட்டு காத்திருக்க, படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும், டைரக்டர் ஏ.எல்.விஜய்யும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுத்தனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், தயாரிப்பாளர் கண்ணீர் விட்டு அழுதார்.
அதன் பின்னரும், தலைவா படத்துக்கு நிஜமாக என்ன பிரச்னை என்று கூற முடியாமல் மென்று விழுங்கினர்கள் தயாரிப்பாளரும், டைரக்டரும். பிரஸ் மீட்டில் இருவராலும் பெரும்பாலும் மழுப்பலான பதில்களே கூறப்பட்டன.
இதோ.. செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் கூறிய பதில்
கேள்வி: படத்தில் சில டயலாக்குகள் ஆளும் கட்சியை தாக்குவது போல இருப்பதாக சொல்லப்படுகிறதே?
தயாரிப்பாளர்: யார் வேணும்னாலும், எப்போ வேணாலும் இந்தப் படத்தை பார்க்கலாம். அப்படிப்பட்ட எந்த டயலாக்கும் படத்துல கெடையாது.
அப்படி யாரோட மனசையாவது புண்படுத்தும்படியான டயாலாக் இருந்தா, அது உடனடியா வெட்டப்படும். ஏன்னா… எங்களுக்கு டயலாக் முக்கியமில்ல, படம் வெளிவரணும்.. அதுதான் முக்கியம்.
கேள்வி: (படத்தை வெளியிடுவதற்கு) காவல்துறையில பாதுகாப்பு கேட்டிருக்கலாமே?

தயாரிப்பாளர்: அதுக்காகத்தான் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கோம். யாரால இந்தப்படம் தடைபட்டிருக்கு, எதனால இந்தப்படம் நிக்குது?ன்னு எங்களாலேயே ஒன்னும் சொல்ல முடியல. மற்ற மாநிலங்களுக்கும், ஊர்களுக்கும் பிரிண்ட்டை அனுப்பிச்சிருக்கோம், எல்லா ஊர்களிலும் படம் வெற்றிகரமா ஓடிக்கிட்டிருக்கு. ஆனா தமிழ்நாட்டுல மட்டும் ஏன் படத்தை வெளியில முடியலேன்னு எங்களுக்கு தெரியல.
கேள்வி: இந்த படத்தை ரிலீஸ் பண்ணக்கூடாதுன்னு கவர்மெண்ட்டுக்கிட்டே இருந்து உங்களுக்கு மிரட்டல் ஏதாவது வந்ததா?
தயாரிப்பாளர்: அப்படி எதுவும் எங்களுக்கு செய்தி வரல. நாங்க ரிலீஸ் பண்றதுக்கு ரெடியா இருக்கோம்.
கேள்வி: தியேட்டர்களுக்கு பாதுகாப்பு இல்லேங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் இந்தப்படம் ரிலீஸ் ஆகலையா? இல்லேன்னா வேற ஏதாவது காரணம் இருக்கா?
டைரக்டர்: அது மட்டும் தான் காரணம்னு திரையரங்க உரிமையாளர்கள் எங்ககிட்ட சொல்றாங்க, வேற எதுவும் எங்களுக்கு தெரியல.
கேள்வி: நீதிமன்றதுக்கு போகலாமே? ஏன் போகல?
டைரக்டர்: நாங்க தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருக்கோம். அவரை நேரில் சந்திச்சி பிரச்சனையை சொல்லலாம்ணு முடிவு பண்ணியிருக்கோம். ஆனா அவங்க எப்போ எங்களை மீட் பண்ணுவாங்கன்னு தெரியல, அதுக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருக்கோம்.
கேள்வி: நடிகர் விஜய் தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா?
டைரக்டர் : நேத்து ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார். இதுல என்ன ஒரு விஷயம்னா, இந்தப்படத்துல தப்பான வசனங்கள் இருக்கு, கவர்மெண்ட்டுக்கு எதிரான படம்னு இந்தப்படத்தைப் பத்தி தப்பான ஒரு ரூமர் வந்துக்கிட்டிருக்கு. ஆனால் அப்படியெல்லாம் படத்துல எதுவுமே கெடையாது. இந்தப்படம் ஒரு அரசியல் படமே கிடையாது. தயவு செஞ்சி யாரும் இதை நம்ப வேண்டாம்.
கேள்வி: எஸ்.ஆர்.எம் குரூப் லஞ்சமா வாங்குற பணத்துல தான் இந்தப்படத்தை ரிலீஸ் பண்றாங்க, அதுனால தான் நாங்க மிரட்டல் கடிதம் அனுப்பிச்சிருக்கோம்னு மாணவர் புரட்சிப்படை சொல்றாங்கன்னு சொல்றாங்களே… அது உண்மையா?
டைரக்டர் : அதைப்பத்தி எங்களுக்கு எதுவும் தெரியாது.
கேள்வி: வெடிகுண்டு மிரட்டல் தான் ஒரே காரணம்னா, அந்த மிரட்டல் விடுத்தவர்களை போலீஸ் கைது பண்ணியிருக்காங்களா?
டைரக்டர்: அதுபத்தி தயாரிப்பாளர் ஏற்கனவே புகார் கொடுத்திருக்காரு… மத்தபடி எதுவும் தெரியல.
கேள்வி: முதல்வரை எப்போ சந்தீப்பீங்க?
டைரக்டர் : நாங்க அவங்களை மீட் பண்ண பெர்மிஷன் கேட்டிருக்கோம். ஆனா அவங்க இன்னும் அப்பாயிண்ட்மெண்ட் குடுக்கல.
கேள்வி: அதுக்கு என்ன காரணம்னு நெனைக்கிறீங்க?
டைரக்டர் : அவங்களுக்கு பல வேலைகளை இருக்கும். அவங்க கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் கேட்கத்தான் முடியும். அவங்க எப்போ பெர்மிஷன் தர்றாங்களோ, அப்போ தான் அவங்களை மீட் பண்ண முடியும். நடுவுல இப்போதான் நீங்க எங்களை மீட் பண்ணனும்னு அவங்களுக்கு நாங்க கண்டிஷன் போட முடியாது. அவங்களுக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருக்கோம்.
கேள்வி: உங்களோட அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
டைரக்டர்: நாங்க முயற்சி தான் பண்ணிக்கிட்டிருக்கோம், எங்க கையில எதுவுமே இல்ல. நாங்க தியேட்டர்காரங்களை கெஞ்சிக்கிட்டிருக்கோம், அவங்களும் எங்களுக்கு சரியான ஒரு தகவல் கிடைக்கிறப்போ நாங்க சொல்றோம்ணு சொல்றாங்க. நாங்க முதல்வரை மீட் பண்ணும் போது எங்களுக்கு இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வு கிடைக்கலாம்னு காத்துக்கிட்டிருக்கோம்.
கேள்வி: ஒவ்வொரு படத்துக்கும் முதல்வரை சந்திச்சாதான் போலீஸ் பாதுகாப்பு தருவாங்களா?
டைரக்டர்: நாங்க இப்போ அந்த விஷயத்துக்குள்ளேயே போகலை. எங்களுக்கு படம் ரிலீஸாகணும் அதுதான் முக்கியம்.
கேள்வி: வரிச்சலுகை கிடைக்காததுனால தான் படத்தை ரிலீஸ் பண்ணலையா
டைரக்டர் : அது மாதிரியெல்லாம் இல்லை சார்.
கேள்வி: குறிப்பிட்ட ஒரு தொலைக்காட்சிக்கு சாட்டிலைட் ரைட்ஸை கொடுக்காததுனால தான் இந்த தடையா?
டைரக்டர்: அப்படியெல்லாம் இல்லை சார். அதெல்லாம் ஒரு ரூமர் அவ்ளோதான்.
கேள்வி: உண்மையான காரணம் தான் என்ன?
இருவரும்: எங்களுக்கு தெரியல சார்.
கேள்வி: கேளிக்கை வரிக்குழு படத்தை பார்த்து என்ன சொன்னாங்க?
டைரக்டர்: அவங்க படம் பார்த்தப்போ நாங்க யாருமே ஊர்ல இல்லை. என்ன சொன்னாங்கன்னு எங்களுக்கு தெரியல.
(தயாரிப்பாளர் இடைமறித்து): அந்தப்படத்தை பார்த்துட்டு எங்க படத்துக்கு கேளிக்கை வரிச்சலுகை இல்லேன்னு லெட்டர் வந்துடுச்சு.
கேள்வி: வரிவிலக்கு சலுகை கொடுக்காததுக்கு என்ன காரணம்?
டைரக்டரும், தயாரிப்பாளரும் எந்த பதிலும் சொல்லவில்லை.
கேள்வி: முதலமைச்சரை பார்க்கிற வரைக்கும் நீங்க கோர்ட்டுக்கு போகலேன்னா, நீங்க அவங்களுக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருப்பீங்களா?
தயாரிப்பாளர்: அவங்க தான் எங்களை கூப்பிட்டு பேசணும்.
கேள்வி: படம் நாளைக்கு ரிலீஸாகலேன்னா உங்களுக்கு எவ்ளோ கோடி இழப்பு வரும்?
தயாரிப்பாளர்: போன வாரமே படம் ரிலீஸாகியிருந்தா, தமிழ்நாட்டுல மட்டும் சுமார் 30 கோடி ரூபாய் வசூலாகியிருக்கும், இன்னைக்கு வந்தருந்தா நாங்க கொஞ்சமாவது நஷ்டத்திலிருந்து தப்பிச்சிருப்போம்னு விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரங்களும் சொல்றாங்க. இனிமேலும் லேட் ஆக ஆக இதோட நெலைமை என்னன்னு எனக்கே புரியல.
கேள்வி: நீங்க படத்துல அண்ணாவோட வாரிசா விஜய்யை காட்டியிருப்பதாகவும், அதனால தான் இந்தப்படத்தை… (இந்த கேள்வியை ஒரு நிருபர் கேட்டுக் கொண்டிருக்கு போதே… நன்றி, வணக்கம் சொல்லி டைரக்டர் விஜய்யும், தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயினும் எஸ்கேப் ஆகி விட்டார்கள்)
அடப் பாவமே.. இவர்களுக்கு ஒண்ணுமே தெரியலையாம், புரியலையாம்..
யாரு மிரட்டினாங்க? அது தெரியலை, தியேட்டர்காரங்க ஏன் ரிலீஸ் பண்ணலை? அதுவும் தெரியலை.. நீதிமன்றத்துக்கு போக வழிகூட தெரியலை.. முதல்வர் எப்போ சந்திப்பாங்கன்னும் தெரியலை.. “ஒவ்வொரு படத்துக்கும் முதல்வரை சந்திச்சாதான் போலீஸ் பாதுகாப்பு தருவாங்களா?” என்ற கேள்விக்கு பதிலும் தெரியலை!
எதுவும் தெரியாத இவர்கள் எடுத்த படத்துக்கு பெயர் ‘தலைவா’
‘தலைவா’வை உருவாக்கியவர்கள் மென்று விழுங்கி பதில் கூறியபோது, அவர்களது முகபாவங்களை போட்டோக்களில் காண…

viruvirupu.com/

கருத்துகள் இல்லை: