சென்னையில் இன்று நடந்த தி.முக. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்,
‘‘பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி பற்றி முடிவு செய்ய கருணாநிதி, அன்பழகன்
ஆகியோருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரவாயல் பறக்கும் சாலை மற்றும் 9,300 கோடி நெடுஞ்சாலை துறை திட்டங்கள் முடங்கி கிடக்கின்றன. தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் என்பதால் இந்த திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை. இப்போக்கை கண்டிக்கிறோம்.
சுதந்திர தின உரையில் தமிழகத்திற்கு குரல் கொடுத்த பெரியார், காமராஜர் ஆகியோர் பெயர்கள் விடப்பட்டது ஆச்சரியமும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதவாத சக்திகளின் முயற்சிகளை முறியடித்து தாதமாகும் சேது சமுத்திர திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பது உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக