India auditor says finds irregularities in AgustaWestland deal
டெல்லி: இந்திய விமானப் படைக்கு இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து சொகுசு ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்யதில் எந்த ஒரு விதியையுமே பின்பற்றவில்லை என்று அதிரடியாக மத்திய கணக்கு தணிக்கை துறை குற்றம்சாட்டியுள்ளது. இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பான கணக்காய்வு அறிக்கை இன்று நாடாளுனன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாதுகாப்பு தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கென வகுக்கப்பட்ட விதிகள் இந்த கொள்முதலில் பின்பற்றப்படவில்லை. 2006ஆம் ஆண்டு பாதுகாப்பு தளவடா கொள்முதல் விதி, 2006ஆம் ஆண்டு செப்டம்பரில் கொண்டுவரப்பட்ட கொள்முதலுக்கு முந்தைய பரிசீலனை வேண்டுகோள் என அனைத்துமே இந்த கொள்முதலில் மீறப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்தில் அரசுக்கு சாதகமாக பல்வேறு விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளதுன. ராசா கனிமொழி மாதிரி யாராவது கிடைப்பாங்க பேசாம எஸ்கப் ஆயிடுங்கஇந்த வழக்கு தொடர்பாக வெளிநாடுகளில் விசாரணை நடத்துவது தொடர்பாக கோரிக்கை மனுக்களை 3 முறை பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்துள்ளது. ஹெலிகாப்டர் ஒப்பந்தம் தொடர்பான அனைத்து விசாரணைகளும் இந்தியாவிலேயே நடத்தப்பட வேண்டும் எனவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் பதில் தரப்பட்டுள்ளது. அத்துடன் வாங்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் எதுவுமே பரிசோதிக்கப்படவில்லை. அடிப்படை விலை புள்ளியும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த கொள்வனவும் மிகவும் தாமதமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்கிறது சி.ஏ.ஜி., அறிக்கை
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக