ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

வேட்பு மனுவில் சாதி பெயரை எழுத மறுத்த நடிகை திவ்யா!

பெங்களூர்: சாதி பெயரை வேட்பு மனுவில் எழுத திவ்யா மறுத்ததால் பரபரப்பு
ஏற்பட்டது.பள்ளி, கல்லூரி என சகல இடங்களிலும் விண்ணப்பங்களில் சாதி பெயரை குறிப்பிடுவதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் மாண்டியா தொகுதியில் வரும் 21ம் தேதி எம்பி இடைத்தேர்தல் நடக்கிறது. ‘வாரணம் ஆயிரம், ‘குத்து போன்ற படங்களில் நடித்த திவ்யா காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்காக அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் சாதி பெயர், தந்தை பெயர் எழுத இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இரண்டையும் திவ்யா குறிப்பிட மறுத்துவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி திவ்யா தரப்பில் கூறும் போது, ‘திவ்யா தேர்தலில் போட்டியிடுவது இதுதான் முதல்முறை என்றாலும் இதற்கு முன்பே துணிச்சலான முடிவுகள் எடுத்திருக்கிறார்.கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தமிழர்கள் வாழும் பகுதியில் சென்று தமிழில் பேசி பிரசாரம் செய்ததற்கு அப்பகுதியில் வாழ்ந்த கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை பொருட்படுத்தாமல் தமிழில் தொடர்ந்து பேசி வாக்கு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது என்றனர்.

கருத்துகள் இல்லை: