பாரதிய ஜனதா கட்சியில் நிலவும், உட்கட்சி பூசலை தடுத்து நிறுத்த, சங்
ஆனாலும், பா.ஜ., தொண்டர்கள் மத்தியில்,
மோடிக்கு அமோக வரவேற்பு உள்ளதால், அவரை எப்படியும், பிரதமர் வேட்பாளராக
முன்னிறுத்த வேண்டும் என்பதில், கட்சியின் தேசிய தலைவர், ராஜ்நாத் சிங்
தீவிரமாக உள்ளார். இவை அனைத்துமே, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின்
வழிகாட்டுதலின்படியே, நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
பரிவார் அமைப்பான, ஆர்.எஸ்.எஸ்., தீவிரமாக களம் இறங்கியுள்ளது. "குஜராத்
முதல்வர் நரேந்திர மோடியை விமர்சிக்கும், கட்சித் தலைவர்களுக்கு கடிவாளம்
போடுங்கள்; மீறிப் பேசினால், அவர்களை கட்சியிலிருந்தே நீக்குங்கள்' என,
பா.ஜ., மேலிட தலைவர்களுக்கு, அந்த அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது.
அடுத்த
எட்டு மாதங்களில், லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலின் போது,
பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
முன்னிறுத்தப்படுவது, கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ஆனாலும், கட்சி
மேலிடம், இது தொடர்பாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
மோடியின் தலைமையை ஏற்க, கட்சியில் உள்ள, சில மூத்த தலைவர்கள் எதிர்ப்பு
தெரிவித்து வருவதே, இதற்கு காரணம்.குறிப்பாக, மூத்த தலைவர் அத்வானியும்,
அவரின் ஆதரவாளர்களும், நரேந்திர மோடியை, பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு,
மிகுந்த தயக்கம் காட்டுகின்றனர .சர்வாதிகாரிகள் இப்படிதான் உருவாகிறார்கள் கூஜா தூக்கும் கூட்டம் வெறிபிடித்த கூட்டம் எல்லாம் நாட்டை நாசமாக்கியே தீரும் .
அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ.,வின், தேர்தல் பிரசார குழு தலைவராக, சில நாட்களுக்கு முன், மோடி நியமிக்கப்பட்டார். அது முதல் அவர், மத்திய அரசுக்கு எதிராக, கடும் பிரசாரம் செய்து வருகிறார். சமீபத்தில், சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியேற்றி, உரை நிகழ்த்திய போது கூட, பிரதமர் மன்மோகன் சிங்கை கடுமையாக விமர்சித்தார்.
பா.ஜ.,வுக்கு வலு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, அவர் இவ்வாறு செயல்பட்டாலும், அதை, கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் சிலர், கடுமையாக எதிர்க்கின்றனர். மோடியின் பேச்சு மற்றும் அவரின் செயல்பாடு தொடர்பாக, அவ்வப்போது, தங்களின் அதிருப்தியை தெரிவிக்கின்றனர். இதற்கு உதாரணமாக, கட்சியின் நட்சத்திர பிரசாரகராக கருதப்படும் சத்ருகன் சின்கா, பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை, சமீபத்தில் புகழ்ந்து பேசியதை கூறலாம். மோடியை பலமாக எதிர்க்கும், நிதிஷ்குமாரை, சின்கா புகழ்ந்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன், மோடியின் எதிர்ப்பாளராக வர்ணிக்கப்படும், அத்வானியையும், சின்கா பாராட்டிப் பேசினார்.
பா.ஜ.,வுக்குள் நிலவும், இதுபோன்ற கருத்தொற்றுமை இல்லாத நிலைமையை, ஒழித்துக் கட்ட, சங் பரிவார் அமைப்பான, ஆர்.எஸ்.எஸ்., தீவிரமாக களம் இறங்கி உள்ளதாக தெரிகிறது. "நரேந்திர மோடியே பிரதமர் வேட்பாளர்' என, பெரும்பான்மையோர் முடிவு செய்துள்ள நிலையில், அவரை ஏற்க மறுப்பதோடு, அவ்வப்போது அவரை மட்டம் தட்டும் வகையில் பேசும், தலைவர்களுக்கு கடிவாளம் போட வேண்டும் என்றும் முடிவெடுத்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், பா.ஜ., மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., முக்கிய தலைவர்களில் ஒருவரான, சுரேஷ் சோனி கலந்து கொண்டார்.
பா.ஜ.,வுக்கும், ஆர்.எஸ்.எஸ்.,க்கும் இடையிலான, பாலமாக கருதப்படும் இவர், ஆலோசனை கூட்டத்தில் பேசும் போது கூறியதாவது:தற்போது, நாடு முழுவதும், காங்கிரசுக்கு எதிரான அலை உருவாகியுள்ளது. இது, பா.ஜ.,வுக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு. இந்த எதிர்ப்பு அலையையும், காங்கிரசுக்கு எதிராக, மக்களிடையே உருவாகியுள்ள கோபத்தையும், பா.ஜ., சாதகமாக பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தினால், மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிப்பது நிச்சயம்.அதை விடுத்து, பா.ஜ., கட்சியினர் கோஷ்டி பூசல்களில் ஈடுபட்டால், அது கட்சியை பாதிப்பதோடு, பொதுத் தேர்தலில், கிடைக்க வேண்டிய வெற்றி வாய்ப்பையும் பறித்து விடும். மத்தியில், பா.ஜ., மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் எனில், நரேந்திர மோடியின் தலைமையை, அனைவரும் உறுதியுடன் ஏற்க வேண்டும். அவரையும், அவரது தலைமையையும், வெளிப்படையாக விமர்சிப்பவர்கள் மீது, கட்சி மேலிடம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுப்பாட்டை மீறி பேசுகிறவர்களை, கட்சியிலிருந்து, ஆறு ஆண்டுகளுக்கு, "சஸ்பெண்ட்' செய்ய வேண்டும்.இவ்வாறு சுரேஷ் சோனி பேசியுள்ளார்.
அதனால், அவரின் பேச்சுக்கு ஏற்ற வகையில், விரைவில், பா.ஜ.,வில் அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
-நமது டில்லி நிருபர்-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக