புதன், 14 ஆகஸ்ட், 2013

அதிர்ச்சியில் இருக்கிறோம் என்கிறார் விஜய் ! வாய்தா ராணியை ஆட்சியில் அமர்த்தினால் நாட்டில நல்லது நடக்கும் என்று சொன்னதாக ஞாபகம்

அதிர்ச்சியில் இருக்கிறோம்; இது தர்மத்தின்படியும் தவறாகும் :விஜய் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு பல்வேறு பிரச்சனைகளால் விஜய் நடித்த தலைவா படம் தமிழகத்தில் வெளியாகவில்லை.  ஆனால், மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது.  தமிழகத்தில் வெளியிட தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நடிகர் விஜய் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அப்பதிவில் அவர்,  ’’ தலைவா படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் தமிழகத்தில் வெளியாக வில்லை. படம் வெளியாவதற்கு இரண்டு நாளுக்கு முன்னர் தியேட்டர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.இந்த நேரத்தில் தலைவா படம் வெளியானால் பிரச்சனை வரும் எனக் கருதியதால், படம் வெளியாக வில்லை. இதைக் கேட்டு படக்குழுவினர் உட்பட அனைவரும் ஆடிப்போய் உள்ளனர். படம் வெளியாகாததால் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறோம். இப்பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்து விரைவில் சந்தித்து பேசுவோம் என நம்புகிறோம்.
இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்ற, முதல்வர் ஜெயலலிதா உழைத்து வருகிறார். அதேபோல் தலைவா பட விவகாரத்திலும் தலையிட்டு படம் வெளியாக உதவி செய்வார்.கடைசி நேரத்தில் கேரளா, ஆந்திரா ஆகிய வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் படம் வெளியா வதை தடுக்க முடியவில்லை. தமிழகத்தில் திருட்டு சி.டி., புழக்கத்தில் உள்ளது.இதை தமிழக மக்கள் அனுமதிக்க கூடாது. பெரும் உழைப்பில் தலைவா படம் உருவாகி இருக்கிறது. சில ரூபாயில் திருட்டு சி.டி., வெளியாவது சட்டப்படி குற்றமாகும். இது தர்மத்தின்படியும் தவறாகும்.தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம் ஆகிய இடங்களில் திருட்டு சி.டி., விற்றவர்களை ரசிகர்கள் பிடித்து ள்ளனர். திருட்டு சி.டி.,யை தடுப்பதற்கு உதவி புரிந்த காவல்துறையினருக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.தலைவா படம் எல்லோரும் ரசிக்கும் விதத்தில் உருவாகி உள்ளது. ஓரிரு நாளில் படம் வெளியாகும்’’என்று பேசியுள்ளார்.nakkheeran.in/

கருத்துகள் இல்லை: