திங்கள், 12 ஆகஸ்ட், 2013

காணாமல் போன 87 கம்பெனிகள் ! பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி விட்டு Escape

புதுடில்லி:பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி விட்டு காணாமல் போன கம்பெனிகள் மற்றும் அவற்றின் இயக்குனர் களை கண்டறிய, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த, 10 கம்பெனிகளின் இயக்குனர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக, மத்திய கம்பெனிகள் விவகாரத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பொதுமக்களிடம் இருந்து, முதலீடு களைப் பெற்று விட்டு, காணாமல் போகும் கம்பெனிகளின் எண்ணிக்கை, நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. இந்த வகையில்,87 கம்பெனிகளும் அவற்றின் இயக்குனர்களும் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன,87 கம்பெனிகளில்,26 கம்பெனிகள் குஜராத் மாநிலத்தையும்,13 கம்பெனிகள் ஆந்திராவையும்,10கம்பெனிகள் தமிழகத் தையும் சேர்ந்தவை.மகாராஷ்டிராவைச் சேர்ந்த,9, டில்லி, மேற்கு வங்கம், மத்திய பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த தலா, ஐந்து கம்பெனிகள், உத்தர பிரதேசம், பீகாரைச் சேர்ந்த, நான்கு கம்பெனிகள், சண்டிகார் மற்றும் கர்நாடாகாவை சேர்ந்த, தலா இரண்டு, பஞ்சாப் மற்றும் ஒடிசாவை சேர்ந்த தலா, ஒரு கம்பெனியும், இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள் ளன.
இந்த கம்பெனிகள் மற்றும் அவற்றின் இயக்குனர்களுக்கு எதிராக, சம்பந்தப்பட்ட மாநிலங்களில், முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கம்பெனிகளின் இயக்குனர்களை கண்டறிய, பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு கம்பெனிகள் விவகாரத் துறை தெரிவித்துள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை: