இசையமைப்பாளர்
ஏ.ஆர்.ரகுமான் சென்னை அரும்பாக்கத்தில் புதிய
இசைக்கல்லூரி ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த கல்லூரியில் இசை குறித்தான டிப்ளமோ, பட்டப்படிப்புகள் போன்றவை இடம்பெற்றுள்ளன. கே.எம். இசை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி எனும் பெயர் தாங்கிய இக்கல்லூரியின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரிலையன்ஸ் குழுமத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி ரிப்பன் வெட்டி இக்கல்லூரியை திறந்து வைத்தார். அவருடன் அவரது மனைவி நீடா அம்பானியும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் ஆசிரியர் குழுவில் உள்ள 4 பேர் பியானோ போன்ற இசைக் கருவிகளை இசைத்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
முகேஷ் அம்பானி பேசுகையில், இசையின் எதிர்கால தேவைகளை மற்றவர்களைவிட நன்கு அறிந்தவர் ஏ.ஆர்.ரகுமான். அவர் இந்த கல்லூரியை தொடங்குவது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக