இம்பால்: இந்தியா- மியான்மர் எல்லையில் முறையான அளவீடு
மேற்கொள்ளப்படாமல் எல்லை வேலி அமைக்கப்படும் பணிகள் நடைபெறுவதால் மோரே
தமிழர் கோயில் உட்பட 40 இந்திய கிராமங்கள் மணிப்பூருக்குள் போகும் அபாயம்
எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மணிப்பூர் ஐக்கிய கமிட்டியினர் கூறுகையில், மியான்மருடனான
எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அப்படி தீர்வு காணாமல் எல்லை வேலி
அமைப்பதால் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் மியான்மருக்குள் போகக் கூடிய
அபாயம் இருக்கிறது. இதனால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
இதனால் எல்லை வேலி அமைக்கும் பணியை உடனே நிறுத்தி இருநாட்டு அதிகாரிகளும்
இணைந்து கூட்டு சர்வே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
இதனிடையே மோரேவில் அமைக்கப்பட்டு வரும் எல்லை வேலியை கண்காணிப்பதற்காக
மணிப்பூர் மாநில அரசு ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக