செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

வெற்றியை நோக்கி திமுக? பா ம க , தே மு தி க மற்றும் பல கட்சியினர் திமுகவை நோக்கி யாத்திரை !

சென்னை: காஞ்சீபுரம் மாவட்ட பாமக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 3,000 பேர் இன்று திமுகவில் சேர்கின்றனர். காஞ்சீபுரம் மாவட்ட பாமக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் கட்சிகளில் இருந்து விலகி இன்று திமுகவில் சேர்கின்றனர். இன்று மாலை மறைமலை நகரில் நடக்கும் விழாவில் அவர்கள் திமுக பொருளாளர் முக ஸ்டாலின் முன்பு திமுகவில் இணைகின்றனர். அவர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து, கட்சி உறுப்பினர் அட்டைகளை ஸ்டாலின் வழங்கி உரை நிகழ்த்துகிறார். இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும், பாமக துணைத் தலைவருமான து.மூர்த்தி மற்றும் தேமுதிக உள்பட பல்வேறு கட்சிகளில் இருந்து மாற்றுக் கட்சியினர் தி.மு.கழகத்தில் இணையும் மாபெரும் விழா மறைமலைநகர் அண்ணா திடலில் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது. திமு கழக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் து. மூர்த்தி, தேமுதிக பிரமுகர் தமிழ்வேந்தன் மற்றும் பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணைகிறார்கள். இதில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்ற வருகை தரும் கழக பொருளாளர் மு.க.ஸ்டாலினை வரவேற்க, ஆலந்தூர் கத்திப்பாரா சந்திப்பில் இருந்து மறைமலைநகர் வரை கொடி- தோரணங்கள் வழி நெடுகிலும் அழகு பட அமைக்கப்பட்டுள்ளது. வரவேற்பு பதாகைகளும் வழியெங்கும் வைக்கப்பட்டுள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: