Eleven Indian prisoners languishing in Kot Lakhpat Jail of Lahore have sought death to get rid of their "sorrowful lives".புதுடில்லி : பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்தியர்கள், 11 பேர், தங்களை
கருணைக் கொலை செய்யும்படி, இரு நாட்டு அரசுகளுக்கும், கடிதம்
எழுதியுள்ளனர்.பாகிஸ்தானின், லாகூர் நகரில் உள்ள, கோட் லாக்பாட்
சிறையில், ஏராளமான இந்தியர்கள், கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சக
கைதிகளாலும், சிறைக் காவலர்கள் மற்றும் அதிகாரிகளாலும், கடுமையாக
துன்புறுத்தப்படுவதாக, அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், சிறையில் கொடுமையை அனுபவிக்க முடியாத, 11 இந்தியர்கள், தங்களை
கருணைக் கொலை செய்து விடும்படி, பாக்., மற்றும் இந்திய அரசுக்கு கண்ணீர்
மல்க கடிதம் எழுதியுள்ளனர். இந்தியில் எழுதப்பட்ட அந்த கடிதத்தின் நகலை,
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த, பா.ஜ., ராஜ்யசபா எம்.பி., அவிநாஷ் ராய் கண்ணா
நேற்று வெளியிட்டார்.
கடிதத்தில், தங்களை சுட்டுக் கொன்று விடும்படி எழுதி, 11 கைதிகளும், கையெழுத்திட்டுள்ளனர். தங்களை தவிர, மேலும், 21 கைதிகள், சிறையில் நடக்கும் கொடுமைகளால், மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.சில மாதங்களுக்கு முன், பாக்., சிறையில், சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த இந்தியர், சரப்ஜித் சிங்கும், லாகூர் சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. dinamalarcom

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக