படம் வெளிவராவிட்டால் கடனாளி ஆகிவிடுவேன்: ஜெயலலிதாவுக்கு
'தலைவா' தயாரிப்பாளர் வேண்டுகோள் தலைவா திரைப்பட தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
'தலைவா' தயாரிப்பாளர் வேண்டுகோள் தலைவா திரைப்பட தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:–
அம்மா
நான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். இதற்கு முன் இரண்டு படங்கள் தயாரித்து
நல்ல விதமாக வெளியிட்டு இருக்கிறேன். நான் ஒரு நல்ல தயாரிப்பாளனாகவும்,
நாணயமான தயாரிப்பாளனாகவும் தமிழ் திரை உலகில் பேர் எடுத்து இருக்கிறேன்.
கடந்த
4 வருடங்களாக முயற்சி செய்து நடிகர் விஜய்யின் கால்ஷீட் பெற்று பல கோடிகள்
கடன் வாங்கி மிகுந்த பொருட்செலவில் இந்த தலைவா திரைப்படத்தை தயாரித்து
இருக்கிறேன்.
கடந்த 9.8.2013 அன்று படத்தை வெளியிடுவதாக விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் செய்து இருக்கிறேன்.
இந்த
தலைவா திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு
தியேட்டர்களுக்கு யாரோ இந்த திரைப்படத்தை வெளியிட கூடாது என்று வெடிகுண்டு
மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள். இதனால் தியேட்டர் அதிபர்கள் படத்தை
திரையிட பயந்து படம் 9–ந்தேதி வெளியிட முடியாமல் ஆகிவிட்டது.
ஆனால்
அதே நாளில் வெளிநாடுகளிலும், கேரளா, கர்நாடக, ஆந்திரா போன்ற வெளி
மாநிலங்களிலும் படம் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் வெளிவராமல்
நின்றுவிட்டது.
இதற்கு
இடையில் இன்டர்நெட்டிலும் திருட்டு வி.சி.டிகளிலும் படம் வெளி வந்த வண்ணம்
உள்ளன. இதனால் எனக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் நிலைமை உருவாகிவிட்டது.
இந்த படம் இந்த வாரம் கூட அதாவது 16.8.2013 (நாளை) அன்று கூட
வெளியாகாவிட்டால் நான் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகுந்த
கஷ்டத்திற்கு ஆளாவேன்.
இந்த
திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரை அரங்கு உரிமையாளர்களும்
மிகவும் நஷ்டத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி உள்ளார்கள்.
ஆகவே
முதல்– அமைச்சர் ஜெயலலிதா மனமிறங்கி இந்த திரைப்படம் நாளை (16.8.2013)
வெளிவர வேண்டிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று
தாழ்பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக