வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி ! ரூபாய் மதிப்பு சரிவு ! சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிந்தது

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அண்மைக் காலமாக தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில் இன்று வரலாறு காணாத வகையில் ரூ.62.03ஆக சரிந்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரித்து வருவதே ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.


ரூபாயின் மதிப்பு சரிந்ததால் வங்கித் துறை பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. சென்செக்ஸ் 800 புள்ளகிள் சரிந்து 18,560 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 244 புள்ளிகள் சரிந்து 5,498 புள்ளிகள் ஆனது. லாபத்தை பதிவு செய்யும் நோக்குடன் முதலீட்டாளர்கள் செயல்பட்டதால் 3%த்திற்கு மேல் சரிவு ஏற்பட்டது.

இந்நிலையில், வராலாறு காணாத வகையில் சரியும் ரூபாயின் மதிப்பு மற்றும் பங்குச்சந்தை வீழ்ச்சியை கட்டுப்படுத்துவது குறித்து நிதித்துறை அதிகாரிகளுடன் பிரதமர் அலுவலக அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர்.

தொடர் சரிவு குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த வீழ்ச்சியால் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை சமாளிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: