திங்கள், 26 செப்டம்பர், 2011

ராஜினி, சரோஜினி மகேஸ்வரி ரேலங்கிக்காகவும் உருட்டினகுமார் வாதாடுவாரா?

ஒபாமாவுக்கு நான்கு அழைப்பாணைகள். மன்மோகன் சிங்கிற்கும் அமெரிக்காவில் அழைப்பாணை.

ஓசாமா பின்லாடனின் மனைவியர் நால்வரும் தங்கள் கணவனைக் கொன்றதற்காக ஒபாமாவிற்கெதிராக அமெரிக்காவில் பல்வேறு மாநிலங்களில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் சார்பாக தமிழீழ அசட்டுத்தரணி விசுவநாதன் உருட்டினகுமார் ஆஜராகிறார். பின்லாடனின் ஒவ்வொரு மனைவியும் தமது கணவன் ஒபாமா எந்தவித முன்னறிவித்தலோ, எச்சரிக்கையோ இன்றி அதிரடித் தாக்குதலில் பாக்கிஸ்தானில் உணவு உண்டு கொண்டிருக்கும்போது ஒபாமா கொன்றதாக பல்வேறு மாநிலங்களில் வழக்குத் தாக்கல் செய்திருந்தாலும் நான்கு மாநிலங்களும் ஒரே நேரத்தில் அதிபர் ஒபாமாவிற்கு அழைப்பாணை அனுப்பியுள்ளன. எந்த அழைப்பாணைக்கு முதலில் செல்வது என்று ஒபாமா குழம்பியுள்ளார்.

பயங்கரவாதிகளுக்கு எதிராக போரை(War Against Terrorism) உலகமெங்கும் பிரகடனப்படுத்திய நாடு அமெரிக்கா. இதனால் ஆஃப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் போரை நடாத்திக் கொண்டிருக்கிறது. பல பயங்கரவாதிகளையும் அதன் தலைவர்களையும் கொன்ற அமெரிக்கா அந்த யுத்தத்தில் பல லட்சக்கணக்கான அப்பாவிகளையும் கொல்ல வேண்டி ஏற்பட்டது. அதாவது Colleteral Damage ஏற்பட்டது. ஆனால் இப்போது ஏனைய நாடுகளில் அந்த நாடுகளின் ராணுவத்தினரால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் மனைவியர்கள் தங்கள் நாட்டுத் தலைவர்களுக்கெதிராக அமெரிக்காவில் போர்க்குற்ற வழக்குகளைத் தொடுக்க ஆரம்பித்துள்ளனர். அதனை ஆரம்பித்து வைத்தவர் நாடு கவுண்ட தமிழீழப் பிரதமர் விசுவநாதன் உருட்டினகுமார் ஆவார். முள்ளி வாய்க்காலில் கோணலாகிப்போன புலிப்பயங்கரவாதியான கோணல் ரமேஸின் மனைவி வத்சலா தனது பயங்கரவாதிக் கணவனைக் கொன்றதற்காக இலங்கை அரசாங்கத்திற்கெதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடுத்துள்ளார். இதனையறிந்த சர்வதேச பயங்கரவாதிகளின் மனைவியர்கள் எலலோரும் அசட்டுத்தரணி உருட்டினகுமாரைத் தேடிப் படையெடுக்கின்றனர். சந்தனக் கட்டை வீரப்பனின் மனைவியும் உருட்டினகுமாரின் உதவியுடன் தனது கணவன் மூச்சுவிட முடியாமல் கஸ்டப்பட்ட நேரத்தில் தமிழ்நாட்டுப் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக போர்க்குற்ற வழக்குத் தொடுத்துள்ளனர். மன்மோகன் சிங்கிற்கும் அமெரிக்கா அழைப்பாணை பிறப்பித்துள்ளது. கியூபா குவன்ரானாமோவில் அமெரிக்காவினால் சிறை வைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதிகளின் மனைவியர்கள்,பாகிஸதான்,காஷ்மீரிலுள்ள பயங்கரவாதிகளின் மனைவியர்கள்; முன்னேற்பாடாக முன்வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் அதிபர் ஜோர்ச் புஷ் தலைமறைவாகலாம் எனத் தெரியவருகிறது. அமெரிக்காவினூடாக கனடா வரும் அகதிகளின் வருகை இனிமேல் சாத்தியமாகாது என்பதால் அவர்களின் பிணைப்பணத்தை கபளீகரம் செய்து சுருட்டி வந்த உருட்டினகுமார் அமெரிக்காவில் வாங்கிய பங்களாக்களின் கட்டுப்பணப் பிரச்சனையினால் நாடுகவுண்ட தமிழீழத்தை உருவாக்கி அதிலும் எதிர்பார்த்த வருமானம் இல்லாததால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் மனைவிமார்களின் தயவை நாடியுள்ளார். இது ஒருபுறமிருக்க புலிகளால் கொல்லப்பட்ட மாத்தயாவின் மனைவி, பத்மநாபாவின் மனைவி, அதிபர் ஆனந்தராஜாவின் மனைவி,அமிர்தலிங்கத்தின் மனைவி.ராஜீவ் காந்தியின் மனைவி, பிரேமதாசா மற்றும் புலிகளால் கொல்லப்பட்ட மாற்று இயக்கத் தலைவர்கள்; உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், தமிழ்,சிங்கள அரசியல் தலைவர்களின் மனைவியர்கள், இளைஞர் யுவதிகளின் பெற்றோர்கள் சகோதரர்கள். புலிகளால் கொல்லப்பட்ட ராஜினி, சரோஜினி யோகேஸ்வரன், மகேஸ்வரி வேலாயுதம், செல்வி. ரேலங்கி போன்றவர்களின் குடும்பங்கள் யார் மீது வழக்குப் போடுவது என்றும் இவர்களுக்கு சார்பாகவும் உருட்டினகுமார் வாதாடுவாரா என்றும் யோசித்து வருகின்றனர்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச்சிரிக்கச் சிரிப்பு வருது. சின்னமனிதன் பெரிய மனிதன் செயலைப்பார்க்கச் சிரிப்பு வருது......................!