யாழ்ப்பாணத்தில் குடியேற சென்றுள்ள சிங்கள மக்களை சமூக நல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று காலை சந்தித்துள்ளார். தீடிரென யாழ்ப்பாணத்துக்கு வந்தள்ள இவர்கள் யாழ்ப்பாணத்தில் தாம் குடியேற போவதாக அறிவித்துவிட்டு தற்போது யாழ் புகையிரத நிலையத்தில் தங்கியுள்ளனர்.
இவ்வாறு வருகைதந்துள்ள சுமார் 80 குடும்பங்கள் தம்மை குடியமர அனுமதிக்குமாறு யாழ் அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந் நிலையில் இன்று காலை அங்கு தீடிர் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக