‘வெறும் வாய மெல்லுறவனுக்கு அவுள்’ கிடைச்சமாதிரி விவகாரமான போட்டி ஒண்ணு சமீபத்தில் நடந்திருக்கு. இந்தப் போட்டியை நடந்தியிருப்பது மும்பையில் வெளியாகும் “பான்ட்டஸி” என்னும் ஆண்களுக்கான இதழ்தான்.
வித்தியாசமான சர்வேக்களை நடத்திவரும் இந்த இதழ் வில்லங்கமான சர்வே ஒன்றையும் நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.
அந்த வில்லங்கமான சர்வே “இந்திய நடிகைகளில் பார்த்ததும் முத்தமிடத் தூண்டும் அழகி யார்...?” என்பதுதான். ( ரொம்ப முக்கியம்)
இப்படி ஒரு போட்டியை சமீபத்தில் மும்பையில் நடந்தியது அந்த இதழ். இதில் ஏகப்பட்ட ஆண்களிடம் கேள்வி கேட்கப்பட்டதாம்.
இந்திய நடிகைகளில் முத்தமிடுவதற்கு ஆர்வத்தை தூண்டும் அளவுக்கு கவர்ச்சியான தோற்றம் கொண்டவர் யார்? என்ற கிளு கிளுப்பான கேள்விக்கு பதிலளித்த ஆண்களின் தேர்வில் முதிலிடத்தில் இருப்பவர் 28 வயது இந்தி நடிகையான பிரியங்கா சோப்ரா.
" பிரியங்காவின் உதடுகள் ரொம்பவும் அழகாக உள்ளன, அவற்றைப் பார்த்த உடனேயே முத்தம் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகின்றன," என்று பெரும்பாலான ஆண்கள் கருத்து தெரிவித்திருந்தார்களாம்.
2 வது இடத்தில் ஐஸ்வர்யா ராய். 3 வது இடத்தில் கரீனா கபூர். பாலிவுட்டின் வங்காள அழகி பிபாஷா பாசுக்கு 4 வது இடம். கத்ரினா கைப் 5வது இடத்திலும், சோனம் கபூர் 6வது இடத்திலும், மல்லிகா ஷெராவத் 7வது இடத்திலும் உள்ளனர்.
தீபிகா படுகோனேவுக்கு 8வது இடமும், ஜெனிலியாவுக்கு 9வது இடமும் கிடைத்துள்ளது. இந்தக் கணக்கெடுப்பில் அசினுக்கு கிடைத்திருப்பது 10 வது இடமாம்.
என்னக் கொடுமை சார் இது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக