ஞாயிறு, 10 அக்டோபர், 2010

திருமலையில் இந்திய கடற்படை கப்பல்கள்


இலங்கை வந்துள்ள இந்தியாவின் நான்கு யுத்தக் கப்பல்களில் மூன்று நேற்று சனிக்கிழமை காலை பத்தரை மணியளவில் திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்ததாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.    ஐ.என்.எஸ்.வீர், ஐ.என்.எஸ். ஷர்துல் மற்றும் ஐ.என்.எஸ்.வருணா ஆகிய இந்திய யுத்தக் கப்பல்களே திருகோணமலையை வந்தடைந்தன.
ஐ.என்.எஸ்.தரங்கிணி என்ற கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இலங்கைக் கடற்படையினருடன் பயிற்சிகளை மேற்கொள்ளும் நோக்குடன் இந்திய யுத்தக் கப்பல்கள் வந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறின. நான்கு கப்பல்களிலும் 160 இந்தியக் கடற்படையினர் வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. எதிர்வரும் 15 ஆம் திகதிவரை இந்திய,   இலங்கை கடற்படையினரின் கூட்டுப் பயிற்சி இலங்கைக் கடற்பரப்பில் இடம்பெறுமென்றும் அவ்வட்டாரங்கள் கூறின.

கருத்துகள் இல்லை: