ஞாயிறு, 10 அக்டோபர், 2010

தமது கழுத்தை மாத்திரம் தக்கவைத்து கொள்ள தமது தந்தையார் தயாரில்லை: அப்சரா பொன்சேகா


மன்னிப்பு கோரி, தமது கழுத்தை மாத்திரம் தக்கவைத்து கொள்ள தமது தந்தையார் தயாரில்லை என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மகளான அப்சரா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இலங்கை மக்கள், விளையாட்டு பிள்ளைகள் அல்ல, அவர்கள் நிச்சயம் சிறந்த முடிவை எடுப்பார்கள் என அப்சரா பொன்கோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பதில், ஜே வி பிக்குள் முரண்பாடுகள் நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜே வி பியின் அடித்தள தலைவர்கள் பலர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதை விரும்பவில்லை.
சரத் பொன்சேகா, 88 மற்றும் 89 ஆம் ஆண்டுப் பகுதியில், ஜே வி பியின் உறுப்பினர்கள் பலரை கொலை செய்தவர் என்ற குற்றச்சாட்டை இவர்கள் முன்வைத்துள்ளனர்.
இந்தநிலையில் அண்மைக்காலமாக ஜே வி பி மேற்கொண்ட போராட்டங்கள் வெற்றிபெறவில்லை என்றும் அந்த கட்சியின் அடித்தள உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனினும் இதனை மறுத்துள்ள ஜே வி பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத், ஜேவிபிக்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: