செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

சுரேஸ், முன்னர் இப்படித்தான் புலிகள் பாய்ந்து பிறாண்டி எடுத்தார்கள்.

குட்டிப் புலிகள் மீது அக்கறை காட்டும் குண்டுப் புலிகள்!!!
தடுத்து வைத்துள்ள புலிச் சந்தேக உறுப்பினர்களை பார்வையிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை பார்வையிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி பாதுகாப்பு அமைச்சில் அனுமதி கோரியுள்ளது. வெலிகந்த புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர்களை பார்வையிடுவதற்கு அனுமதி கோரியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். வெலிகந்த புனர்வாழ்வு மையத்தில் சுமார் மூவாயிரம் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் தாம் அனுமதி கோரியதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உடல் நிலைமை குறித்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் அவர்களை பார்வையிடத் தீர்மானித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. புலிகளுக்கு அருகில் போகும் போது மிகவும் அவதானமாகப் போகும் படி சுரேஸ் அண்ணாவுக்குச் சொல்லி வைக்கவேண்டும். முன்னர் இப்படித்தான் புலிகளைப் பார்க்க சிறைச்சாலைக்குச் சென்ற டக்ளஸ் தேவானந்தா மீது புலிகள் பாய்ந்து பிறாண்டி எடுத்தார்கள். தேவா ஓரளவு விடயம் தெரிந்தவர் என்றபடியால் தப்பித்துக் கொண்டார். சுரேஸ் அண்ணாவுக்கு விடயம் சற்றுத் தெரியுமென்றாலும், உடல்வாகு ஒத்துழைக்காது.
இன்ஷா அல்லா.
(குசும்பன்.)

கருத்துகள் இல்லை: