ஞாயிறு, 8 ஜனவரி, 2017

ஒரு அப்பாவி எம்ஜியார் பைத்தியத்தின் இன்றைய வாக்குமூலம்!


முனியசாமி-ராமலட்சுமி தம்பதியருக்கு 1986-ல் பெண் குழந்தை பிறந்தது. எம்.ஜி.ஆர். மீதுள்ள பற்றின் காரணமாக, அவரது அம்மா சத்யா பெயரையே தனது மகளுக்கு வைத்தார் முனியசாமி, விருதுநகர் மாவட்டம் - வெம்பக்கோட்டையில் கட்டப்பட்டிருந்த அணை திறப்பு விழாவுக்கு எம்.ஜி.ஆர். வந்தபோது அவரைப் பார்ப்பதற்காக குடும்பத்தோடு சென்றார். கூட்ட நெரிசலில் சிக்கிய ராமலட்சுமியின் கையிலிருந்து குழந்தை நழுவி கீழே விழுந்து மிதிபடுகிறது. கூட்டத்தினர் முனியசாமியை கோபிக்கின்றனர். எம்.ஜி.ஆரைப் பார்க்கும் ஆவலில் முன்னேறிய முனியசாமியோ, “"புள்ள போனா.. இன்னொண்ணு பெத்துக்கலாம்.. எந்தலைவனை கிட்டத்துல நின்னு பார்க்கிற பாக்கியம் இனி கிடைக்குமா?'’என்று  பதிலுக்கு கத்தியிருக்கிறார். கூட்டத்தில் மிதிபட்ட குழந்தை சத்யா சில நாட்களில் இறந்துவிடுகிறது. ஆனாலும், முனியசாமியின் எம்.ஜி.ஆர். பற்று குறையவேயில்லை.""அரசியலில் இடம் பெறுபவர்கள் தூய்மை யானவர்களாக இருக்க வேண்டும். தொண்டுள்ளம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இது அண்ணா நமக்களித்த அரசியல் நெறி என்றார் எம்.ஜி.ஆர். அந்த எம்.ஜி.ஆர். அமர்ந்த இடத்தில்.. ஜெயலலிதாம்மா அமர்ந்த இடத்தில் சசிகலாவா? அவரைப் போய் நா கூசாமல் சின்னம்மாங்கிறாங்களே! கால்ல விழறாங்களேன்னு  குமுறிக்கிட்டிருக்கோம்'' என்று பெருமூச்சு விட்டார்."


எதையும் மறைச்சுப் பேசி எனக்குப் பழக்கம் இல்ல..''’என்று விரக்தியோடு சிரித்த  முனியசாமி “""1991ல இருந்து 96 வரைக்கும் சசிகலா சொன்னதைக் கேட்டு ஜெயலலிதா நடந்தாங்க.. ஏமாந்துட்டாங்க. "சுதாகரனை வளர்ப்பு மகனா அறிவிச்சாத்தான்.. சிவாஜி வீட்டுல சம்பந்தம் பண்ண முடியும்'னு அம்மாவ சசிகலா நிர்ப்பந்தம் பண்ணுனாங்க. சசிகலா நிர்ப்பந்தத்துலதான் டான்சி நிலத்தை வாங்கினாங்க. அப்புறம் கோர்ட், கேசு, ஜெயிலுன்னு அம்மா பட்டதெல்லாம்.. சசிகலாவால வந்த சோதனைதான். சாதாரண தொண்டனான எனக்கே சசிகலா பத்தி நல்லா தெரியுதுன்னா.. கட்சியோட உயர்மட்ட நிர்வாகிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தெரி யாமலா இருக்கும்?.

பொன்னையன்.. புரட்சித் தலைவர் பீரியட்ல சட்ட மந்திரியா இருந்தவரு. மதுசூதனனும் சீனியரு. அப்புறம் தமிழ்மகன் உசேன், இவரும் மூத்த தலைவர். இவங்கள்லாம் போயி சசிகலாவ தாங்கிப் பிடிக்கிறாங்க.

;அப்புறம் உதயகுமார்னு ஒரு அமைச்சர்.. "அம்மா வந்து போற சட்டமன்ற வளாகத்துல செருப்பே போடமாட்டேன்னு சொன்னவரு.. இப்ப சசிகலாதான் பொதுச்செயலாளரா வரணும்; முதலமைச்சர் ஆகணும்னு அம்மா செத்த மூணேநாள்ல பேசிருக்காரு. அப்ப.. இத்தனை காலமும் இவங்க காட்டிய மரியாதையெல்லாம் வெறும் நாடகம்தானா?' என்றார் வேதனை யுடன்.

ஆளுமை மிக்கவர் எனப்படும் ஜெயலலிதா ஏன் சசிகலா தரப்பின் நிர்ப்பந்தப்படி ஆட்சி நடத்தினார் என நாம் கேட்டபோது, “"இந்த நடராஜன் இருக்காருல்ல.. அவரு எப்பேர்ப்பட்ட ஆளுன்னு தெரியுமா? 2008-ல தஞ்சாவூர்ல அவரு எப்படியெல்லாம் பேசினாரு?' பெரும் பான்மை சமூகத்தைச் சேர்ந்தவன் நான். உன்னைப் பற்றி எல்லா ரகசியமும் எனக்குத் தெரியும். நீ திருந்த லைன்னா பல ரகசியங்களை வெளியிடுவேன். ஊரை விட்டே உன்னை விரட்டுவேன்'னு பகிரங்கமா அம்மாவ மிரட்டினாரு. இதுக்கெல்லாம் என்கிட்ட ரெகார்ட் இருக்கு. அப்படின்னா ஏதோ ஒரு ரகசியத்தை வச்சுக்கிட்டுத்தான் சசிகலாவும் மன்னார்குடி கும்பலும் அம்மாவுக்கு நிர்ப்பந்தம் தந்துக் கிட்டே இருந்திருக்கு; அதிகாரத்தைப் பயன் படுத்தியிருக்கு.

ஜெயலலிதாவுக்கும் போயஸ் கார்டன்ல இருந்து விரட்டிய சசிகலாவ திரும்பவும் வரவழைக்கிற நிலைமை ஏற்பட்டிருக்கு.  மிரட்டி வந்த மன்னார்குடி குடும்பம் ஜெயலலிதாம்மா செத்த பிறகும் அவங்கள விடல.அ.தி.மு.க. தோற்றுப்போய் பல வழக்கு களை சந்திச்ச சோதனையான காலகட்டத் துல.. 1996-ல சிவகாசியில் அ.தி.மு.க.வுல கவுன்சிலர் சீட் கேட்கிறதுக்கு நாதியில்ல. அப்ப இருந்த நகரச் செயலாளரே இரட்டை இலை சின்னம் வேணாம்னு..  சுயேச்சையா ஊசி நூல் சின்னத்துல நின்னாரு. கட்சிமேல உள்ள அபிமானத்துல நானும் என் பொண்டாட்டி யும் 9, 10-வது வார்டுல இரட்டை இலைல  நின்னு தோத்துப் போனோம்.

இந்த உள்ளாட்சித் தேர்தல்லயும் சீட் கேட்டோம். எல்லா சீட்டையும் விலைக்கு வித்துட்டாங்க. எங்களுக்கு சீட் இல்லைன்னுட்டாங்க. கட்சிக் காக உழைச்சவனுக்கு நீங்க தர்ற மரியாதை இதுதானாங்கிற கோபத்துல  உறுப்பினர் கார்டை நகரச் செயலாளர் அசன்பதுருதீன் முகத்துல விட்டெறிஞ்சுட்டு வந்துட் டேன். மேல் மட்டத்துல உள்ளவங்க வேணும்னா பணத்துக்காக, பதவிக்காக யாரு கால்ல வேணும்னாலும் விழுவாங்க..

போஸ்டர் அடிச்சு.. பேனர் வச்சு.. தீர்மானம் போட்டு.. சசிகலா என்னமோ பெரிய தலைவர் மாதிரி சீன் கிரியேட் பண்ணுறாங்க.. சசிகலாவை அ.தி.மு.க. மகளிரணியினரே ஏத்துக்கல.. பொதுமக்களும் ஏத்துக்கல.. ஆண்களுக்கும் சசிகலா மேல நல்ல  அபிப்ராயம் இல்ல..

அந்தக் காலத்துலதான் எம்.ஜி.ஆர்., சிவாஜின்னு ரசிகர்கள் பிரிஞ்சி நின்னு போஸ்டர்ல சாணி அடிச்சாங்க. இந்த காலத்து ஆளுங்க சாணிய கையில எடுக்கிறத அருவருப்பா நினைப்பாங்க. ஆனாலும், ஜெயலலிதாம்மா சாவுல மர்மம் நீடிக்கிறதால..  சசிகலா மேல உள்ள கோபத்துல..  சாணியை கையில் அள்ளி  சசிகலா போஸ் டர்ல அடிக்கிறாங்க. சாணியை அள்ள வச்ச சசிகலாவை தொண்டர்கள் ஏத்துக்கவே மாட்டாங்க''’என்றார் வேதனையோடு."

தமிழகத்தில் அ.தி.மு.க., நம்பர் 1 வாக்கு வங்கி கட்சியாக நிலைத்திருப்பதற்கு காரணம்,   இரட்டை இலை மீதான பற்றுடன் உள்ள முனியசாமி போன்ற அடிமட்டத் தொண்டர்கள்தான். அவர்கள் சசிகலா தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். நக்கீரன்

-சி.என்.இராமகிருஷ்ணன்
 அடடே...


தஞ்சாவூரில் இருந்து வந்த ஒரு மீடியா      தொடர்புக் குழுவினர் போயஸ்கார்டனில் முகாமிட்டுள்ளனர். நவீன தொழில்நுட்பம் தெரிந்த இந்தக் குழுவினரின் வேலையே, தினமும் சசிகலாவைப் பற்றி பாஸிட்டிவ் செய்திகளை மீடியாவில் வரவைப்பதுதானாம். அதேபோல்  வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இ-மெயில் போன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறார்கள். மேற்படி குழுவால், அ.தி.மு.க.வில் இருக்கும் ஐ.டி. விங் ரொம்பவே கவலைப்படுகிறதாம்.

கருத்துகள் இல்லை: