வெள்ளி, 21 டிசம்பர், 2018

me_too பறித்த ஒரு உயிர்.. ஸ்வரூப் . 35 வயது ... பொய் குற்றச்சாட்டு .. தற்கொலை!


Trial at  press club
Devi Somasundaram : அடிப்படை ஆதாரம் அற்ற எந்த புகாரும்
நிராகரிக்கபடனும்
என்றாலும் சில புகார்கள் ஆதாரம் இல்லாத போதும் விசாரிக்கப் படனும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
.ஆனா குற்றம் சாட்டி விட்டாலே அவன் குற்றவாளி தான் என்ற முடிவுக்கு வரும் மன நிலை கொண்ட சமுக அமைப்பில் குற்ற சாட்டுகள் பொது இடத்தில் கூறப்படுவது எத்தனை ஆபத்தானது என்பதை இந்த சமுகம் உணரணும்.
நம் நீதித்துறை ஆதாரங்களின் அடிப்படையில் தான் எந்த குற்றச்சாட்டையும் ஆராய்ந்து தீர்ப்பு தரும்..வெறும் குற்றசாட்டே அவர் குற்றவாளி என்பதற்கான இறுதி தீர்ப்பு இல்லை .
அதனால் தான் குற்றம் சாட்ட பட்டவர்களை முகத்தை மறைத்து கைது செய்து அழைத்து செல்வது நம் நாட்டு நடை முறை..ஒரு வேளை அவன் தவறா குற்றம் சாட்ட பட்டு நிரபராதாய் இருந்தால் அவன் எதிர்காலம் பாதிக்க பட கூடாது என்ற மனித உரிமை .
.ஆனா me too என்ற போராட்டம் இந்த அடிப்படை சட்ட நீதிகளை புறந்தள்ளி பொதுவெளியில் யார் யார் மேல வேணா குற்றம் சாட்டலாம் என்ற ஒரு அதீத தன்மையை கட்டவிழ்த்து விட்டது ..
அது தான் பென்கள் உரிமை என்றும், பாதுகாப்பு என்றும் பகுத்தறிவாளர்களால் கூட பேச பட்டது ..

டெல்லியை சேர்ந்த ஸ்வரூப் . 35 வயதான இவர் திருமணமாகி தன் மனைவி கிருத்தியுடன் வசித்து வருகிறார்.. அலுவலகத்தில் இரண்டு பெண்கள் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில் அஷ்ருப் தான் நிரபராதின்னு நோட் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார் .
யார் யாரை வேண்டுமானாலும் எந்த ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டலாம் .அதற்கு ஆதரவா அந்த நபரை பணியில் இருந்து ஒதுக்கி வைக்க்லாம் என்பதுலாம் புரட்சி என்றும் பெண் பாதுகாப்பு என்றும் உருவாக்க பட்ட ஒரு தவறான துணிச்சல் ஒரு உயிரை பலி கொண்டு இருக்கு ..
ஸ்வாருப்பின் மனைவியின் இழப்பிற்கு என்ன பதில் வைத்து இருக்கிறது இந்த சமுகம்..இது தான் பெண் பாதுகாப்பா, கிருத்தியின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கியது யார் .? .
இதை எல்லாம் விட குற்ற்ம் சாட்ட பட்டாலே வழக்கறிஞர் ஆஜராக் கூடாது, விசாரிக்க பட கூடாது, உடனே வெட்டி கொல்லனும் போன்றவையும் நவீன தீண்டாமை வடிவமே .
குற்றம் சாட்ட பட்டவர்க்கு அவர் தரப்பு நியாயத்தை பேச வாய்ப்பு தர படாத எந்த அமைப்பும் ஜன நாயகமாகாது .
இப்பவும் நீங்கள் இதை அதே அதீத மன நிலையோடு தான் அனுகு வீர்கள்.. ஒரு உயிர் போய்டுச்சே அஷ்ரூப் நிரபராதி தான் போல அய்யோ என்ற பதட்டம் நிலை தான் வரும் .
நான் அப்படி பாக்கல .எப்படி குற்றம் சாட்ட பட்டாலே ஒருவன் குற்றவாளி இல்லயோ அப்படி தற்கொலை செய்து கொண்டதாலயே அவன் நிரபராதி என்றும் அர்த்தம் இல்லை..
இன்கேஸ் அவர் தப்பா செய்யும் போது செய்துட்டு இப்ப சமுகத்துக்கு பயந்தும் இறந்திருக்கலாம்.. அல்லது நிஜமாவே நிரபராதியாவும் இருந்திருக்க்லாம்..
அதனால் தான் திருப்பி திருப்பி சொல்கிறோம்..சில மிஸ்யூஸஸ் இருந்தாலும் நீதி மன்றமே இறுதி நம்பிக்கைக்கு உரிய இடம்.
பொத்தாம் பொதுவா பொது வெளில குற்றம் சாட்டி ஒரு நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை, சற்று காலதாமதமோ, இடர்பாடோ இருந்தாலும் பாதிக்க பட்டவர், குற்றம் சாட்ட பட்டவர் இருவருக்கும் சம வாய்ப்பு தந்து அந்த குற்றதிற்கான தண்டனை தர படுவது தான் நியாயம் .
ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்க பட்டு விட கூடாது என்பது நீதியின் அடிப்படை .

https://thelogicalindian.com/…/genpact-employee-sexual-ha…/…
#தேவி

கருத்துகள் இல்லை: