சனி, 22 டிசம்பர், 2018

சிறையில் நக்சலைட் பத்மா உயிருக்கு ஆபத்து

nakkheeran.in  jeevathangavel : நக்சல் கடுப்பு பிரிவு போலீசாரால் கைது
செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மார்க்ஸ்சிஸ்ட் - லெனினிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த பெண்ணான பத்மாவுக்கு முறையான மருத்துவ சிகிச்சை தர வேண்டும் என தமிழ்நாடு மக்கள் சிவில் உரிமை கழகம் கூறியுள்ளது. அந்த அமைப்பின் மாநில தலைவர் கன. குறிஞ்சி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், &  "மார்க்சிய லெனினியச் செயற்பாட்டாளர் பத்மா 10 ஆண்டுகள் தலைமறைவுக்குப் பிறகு, திசம்பர் ஏழாம் நாள் தமிழகக் காவல்துறையிடம் சரண் அடைந்தார். ஏற்கெனவே இதய நோயாளியான அவருக்குத் திசம்பர் 10 ஆம் நாள் இதயநோய் தீவிரமான காரணத்தால், அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படாமல், தண்டனைச்சிறைவாசிக்குரிய மருத்துவ சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டது.<
திசம்பர் 13ஆம் நாளன்று மதியம் 1 மணிக்கு அவர் மருத்துவ மனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் உடல்
நிலை மோசமான காரணத்தால், இரண்டரை மணி நேரம் கழித்து, மதியம் மூன்றரை மணிக்கு, மீண்டும் ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். இரண்டு நாள்கள் மட்டுமே மருத்துவமனையில் இருக்க அனுமதிக்கப்பட்டு, மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


திசம்பர் 20 ஆம் நாள் மாலை 7 மணி அளவில் மீண்டும் அவரது உடல் நிலை மிக மிக மோசமானதைத் தொடர்ந்து, ஸ்டான்லி மருத்துவமனையில் தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறைவாசிகள் கடும் நோயினால் பாதிக்கப்படும் பொழுது, அவர்களை மருத்துவமனை க்கு கொண்டு சென்று உரிய மருத்துவ சிகிச்சை கொடுப்பது தான் சட்ட நியதி  சட்டத்திற்கு புறம்பாக சிறை அதிகாரிகள் நடந்து கொள்ள கூடாது. சிறைச்சாலை நிர்வாகத்தின் செயல் மனித உரிமை மீறலாகும்  சிறையில் தோழர் பத்மாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.  இது சம்பந்தமாக தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் கொடுக்க உள்ளோம்" என கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: