திங்கள், 17 டிசம்பர், 2018

பனகல் அரசர் நினைவு நாள் இன்று.. பள்ளிகளில் இலவச மதிய உணவை முதல் முதலில் ..

viaktan : இரண்டு முறை சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த பனகல்
அரசரின் இயற்பெயர், ராமராய நிங்கார்.
பிறப்பால் ஜமீந்தார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்.
பிறப்பு: ஆந்திராவின் காளஹஸ்தி 1866-ம் ஆண்டு, ஜூலை 9 அன்று.
மறைந்தது : டிசம்பர்-16, 1928-ம் ஆண்டு
அவருடைய நினைவு நாளான இன்று அவரைப்பற்றிய குறிப்பு :..
இந்திய மத்திய நாடாளுமன்றத்தில் நிலச்சுவான்தார்கள், ஜமீன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்ட உறுப்பினராக 1912 முதல் 1915 வரை பதவி வகித்தார்.
இதே காலகட்டத்தில் தொடங்கப்பட்ட சென்னை திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் பனகல்.
டாக்டர் டி.எம்.நாயர், பிட்டி. தியாகராயர் செட்டியார் ஆகியோர் “தென்னிந்திய நல உரிமை சங்கத்தை” ( நீதிக் கட்சி ) 1917-ல் தொடங்கினர். கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் அதில் தன்னை இணைத்துக் கொண்டார் பனகல்.
இரட்டை ஆட்சி முறையின் கீழ் சென்னை மாகாணத்துக்கு 1920-ல் நடைபெற்ற முதல் தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார்.
முதல்வர் சுப்பராயலு ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை மந்திரியாகவும் பதவி வகித்தார்.
உடல் நலம் காரணமாக சுப்பராயலு ரெட்டி அடுத்த ஆண்டே பதவியை விட்டு விலகிக் கொண்டார்.

( இப்போது அப்படியெல்லாம் நடக்குமா, என்று யோசிக்க வேண்டாம்)
இதனையடுத்து 'பனகல்' முதல்வராக பொறுப்புக்கு வந்தார். பின்னர், இரண்டாம் முறையாக தேர்தலை சந்தித்து 1923-ல் மீண்டும் பனகலே முதல்வரானார்.
வகுப்பு வாரி இட ஒதுக்கீட்டுக்கு சட்டம் இயற்றியதும், தலித்துகளை இழிவாக குறிப்பிட்டு கூறாமல் ஆதி திராவிடர் என்றழைக்க சட்டம் இயற்றியதும் இவரது சாதனைகள்.
தாழ்த்தப்பட்ட பிள்ளைகளுக்கு பள்ளியில் இலவசமாக மதிய உணவு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதே ஆண்டில்தான் பிரிட்டன் அரசு, ராமராய நிங்காரை "பனகல் அரசர்" என்று அழைத்து கவுரவித்தது..
இரண்டாவது அமைச்சரவையில் தமிழர்களுக்கும் மந்திரி சபையில் சம அந்தஸ்து வேண்டும் (?) என்ற கோரிக்கை வலுப்பெறவே மாகாண வளர்ச்சித்துறை மந்திரியாக பொறுப்புக்கு வந்தார் தமிழரான ம.பொ. சிவஞானம்.
தெலுங்கர்களுக்கென சென்னை மாகாணத்தில் ஒரு பல்கலைக் கழகம் ஏற்படுத்திட கோரிக்கை எழுந்தபோது, அதற்கு ஆணை பிறப்பித்ததோடு, சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக் கழகம் அமையவும் உறுதுணையாக நின்றார்.
இந்துக் கோயில்களில் வருகிற வருமானங்களையெல்லாம் ஒரே இடத்தில் வைத்து நிர்வாகம் செய்யும் விதமாக, இந்து அறநிலையத்துறைக்கான ஒரு சட்ட வடிவை ஏற்படுத்தினார் பனகல்.
இந்து அறநிலையத்துறையை உருவாக்கியவர் பனகல் அரசர் ஆவார்.
- Vikatan EMagazine

கருத்துகள் இல்லை: