tamil.oneindia.com - veerakumaran.:
திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு வருகிறதா அந்த முக்கிய கட்சி?- வீடியோ
சென்னை:
5 மாநில தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றியின் காரணமாக, தமிழகத்தில் திமுக
கூட்டணி மேலும் வலுப்பெற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் முதல் மூன்று மாநிலங்களிலும் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
ராகுல் காந்தி தலைமை ஏற்ற பிறகு காங்கிரஸ் கட்சி பெற்ற மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் மோடியை முன்னிறுத்தும் பாஜகவை எதிர்க்க, ராகுல்காந்தி வலுவான தலைவர் தானா என்ற ஐயப்பாடுகளை இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நீக்கிவிட்டன. இதன் காரணமாக, காங்கிரஸ் கட்சி பழைய பன்னீர்செல்வமாக தோற்றமளிக்க தொடங்கியுள்ளது.
ஸ்டாலின் அறிவிப்பு தமிழகத்தைப் பொறுத்த அளவில் வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடரும் என்பது உறுதியாகிவிட்டது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். திமுக-காங்கிரஸ் கூட்டணி அமையுமா என்ற குழப்பம் இதன் மூலம் முடிவுக்கு வந்துவிட்டது.
ஏற்கனவே 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றியும், இந்த கூட்டணிக்கு மேலும் வலு சேர்த்துவிட்டது. இதனால், இப்போது திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இணைவதற்காக தமிழகத்தில் பல கட்சிகளும் முனைப்புக் காட்டத் தொடங்கியுள்ளன
எதிர்முனை மறுபக்கம் அதிமுக, பாஜக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு எந்த ஒரு பெரிய கட்சியும் தயாராக இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் லோக்சபா தேர்தலில் மேற்சொன்ன இந்த இரு கட்சிகளும் மூழ்கப்போகும் கப்பல்கள் என்று பிற அரசியல் கட்சிகள் கருதுகின்றன.
இந்த நிலையில்தான் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பாமக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதிமுகவுடன் சேர்ந்து கூட்டணி அமைக்க பாமக விரும்பாத நிலையில், தனித்து போட்டியிட்டாலும் மும்முனைப் போட்டியால், தங்கள் வாக்குகள் சிதறும் என்பதை பாமக தலைவர்கள் அறிந்து வைத்துள்ளனர். அதேபோல சில மண்டலங்களில் பாமக பலமாக உள்ளதால், அது திமுக கூட்டணியில் இருப்பது இக்கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும் என்று திமுகவில் உள்ள சீனியர் தலைவர்களும் நினைக்கிறார்கள்.
பாமகவை கசப்புகளை மறந்து திமுக கூட்டணிக்கு அழைத்து வரும் முயற்சியில் திமுக பொருளாளர் துரைமுருகன் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவேதான் இதுவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியை, கூட்டணிக் கட்சி என்று அழைக்காமல் தோழமை கட்சி என்று மட்டுமே சொல்லிவருகிறது திமுக தலைமை.
விரைவிலேயே மாங்கனி நழுவி பாலில் விழும் என்று காத்திருக்கிறார்கள் திமுக தலைவர்கள். இதற்கான தகவல் தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெளியாகும் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக