THE HINDU TAMIL :
பி.பி.ஸ்ரீநிவாஸ் குறித்து டாக்டர் ரங்கநாத் நந்தியால்
எழுதியிருக்கும் ‘மல்டி டேலன்ட்டட் சிங்கர் பி.பி.ஸ்ரீநிவாஸ்’ என்ற ஆங்கில
நூல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (டிசம்பர் 16) மாலை 4 மணிக்கு
நடக்கிறது. சிதார் மேதை பண்டிட் ஜனார்த்தன் மிட்டா வெளியிடுகிறார். இந்த
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஜெமினி கணேசனின் மகள் டாக்டர் ஜெயா ஸ்ரீதர்
பங்கேற்கிறார்.
அப்பாவுக்கும் பி.பி.எஸ்.ஸுக் கும் இடையே இருந்த நட்பை அருகில் இருந்து பார்த்தவள் நான். அந்த அடிப்படையில்தான், பி.பிஎஸ். குறித்து டாக்டர் ரங்கநாத் நந்தியால் எழுதியி ருக்கும் நூல் வெளியீட்டு விழாவுக்கு என்னை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருக்கின்றனர்.
பி.பி.எஸ்.தான் ஜெமினி கணேச னின் திரைக் குரலாக இருந்தவர். முதலில் ஏ.எம்.ராஜா பாடிவந்தார். அதற் குப் பிறகு ‘காலங்களில் அவள் வசந்தம்’ பாடல்தான் முதன் முத லாக அப்பாவுக்கு பி.பி.எஸ். பாடியது.
அந்த பாடல் குறித்து பல மேடை களில் பி.பி.எஸ். சிலாகித்துப் பேசியிருக்கிறார். ‘‘அந்த பாடலுக் குப் பிறகு, ஜெமினி கணேசனுக்கு நான்தான் என்று ஆகிவிட்டது. ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ போன்ற சோகப் பாடல்களிலும் ஜெமினியின் அபரிமிதமான நடிப் பாற்றல் வெளிப்படும். குரலில் நான் வெளிப்படுத்தும் குழைவுக்கு திரை யில் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தினார் ஜெமினி கணே சன். அவருக்காக நான் பாடிய பல பாடல்களும் இன்னமும் மக்கள் மன தில் நீங்காமல் இருப்பதற்கு, அவரது இயல்பான நடிப்பே காரணம்’’ என்று அப்பாவின் நடிப்பை மனம்திறந்து பாராட்டிப் பேசுவார் பி.பி.எஸ்.
அப்பாவின் நெருங்கிய நண்ப ராக கடைசிவரை இருந்தார். அப்பாவின் கடைசி பிறந்தநாளின் போது, எங்கள் வீட்டுக்கு வந்த பி.பி.எஸ். 3 மணி நேரம் வரை அப்பா வுடன் பேசிக் கொண்டிருந்தார்.
சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடக்கும் ‘மல்டி டேலன்ட்டட் சிங்கர் பி.பி.ஸ்ரீநிவாஸ்’ நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற் பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு டாக்டர் ஜெயா ஸ்ரீதர் கூறியுள்ளார்.
‘மனிதன்
என்பவன் தெய்வமாக லாம்’, ‘மயக்கமா கலக்கமா’, ‘பூஜைக்கு வந்த மலரே வா’,
‘வளர்ந்த கதை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா’ - இந்த பாடல் களை காதால்
கேட்கும்போதே, ஜெமினி கணேசனின் நடிப்பு நம் மனத் திரையில் ஓடத்தொடங்கி
விடும். ஜெமினி கணேசன் திரையில் வெளிப்படுத்திய காதல் பூரிப்பும், சோக
உணர்ச்சியும் பி.பி.ஸ்ரீநிவாஸ் குரலில் இழைந்தோடும். ‘ஒரு வேளை
ஜெமினியேதான் பாடு கிறாரோ’ என்றுகூட எண்ணத் தோன் றும். அந்த அளவுக்கு
ஒருமித்து வசீகரப்படுத்தக்கூடியது
ஜெமினி யின் நடிப்பும், பி.பி.எஸ். குரலும். இவர்கள் இருவரும் திரையையும் தாண்டிய நட்பு கொண்டவர்கள். இருவருக்கும் இடையே இருந்த நட்பை நெருங்கியிருந்து பார்த்தவர் ஜெமினி கணேசனின் மகள் டாக்டர் ஜெயா ஸ்ரீதர்.
டாக்டர்
ஜெயா ஸ்ரீதர் தனது தந்தைக் கும், பி.பி.எஸ்ஸுக்கும் இடையிலான நெருக்கமான
நட்பு குறித்து பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:ஜெமினி யின் நடிப்பும், பி.பி.எஸ். குரலும். இவர்கள் இருவரும் திரையையும் தாண்டிய நட்பு கொண்டவர்கள். இருவருக்கும் இடையே இருந்த நட்பை நெருங்கியிருந்து பார்த்தவர் ஜெமினி கணேசனின் மகள் டாக்டர் ஜெயா ஸ்ரீதர்.
அப்பாவுக்கும் பி.பி.எஸ்.ஸுக் கும் இடையே இருந்த நட்பை அருகில் இருந்து பார்த்தவள் நான். அந்த அடிப்படையில்தான், பி.பிஎஸ். குறித்து டாக்டர் ரங்கநாத் நந்தியால் எழுதியி ருக்கும் நூல் வெளியீட்டு விழாவுக்கு என்னை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருக்கின்றனர்.
பி.பி.எஸ்.தான் ஜெமினி கணேச னின் திரைக் குரலாக இருந்தவர். முதலில் ஏ.எம்.ராஜா பாடிவந்தார். அதற் குப் பிறகு ‘காலங்களில் அவள் வசந்தம்’ பாடல்தான் முதன் முத லாக அப்பாவுக்கு பி.பி.எஸ். பாடியது.
அந்த பாடல் குறித்து பல மேடை களில் பி.பி.எஸ். சிலாகித்துப் பேசியிருக்கிறார். ‘‘அந்த பாடலுக் குப் பிறகு, ஜெமினி கணேசனுக்கு நான்தான் என்று ஆகிவிட்டது. ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ போன்ற சோகப் பாடல்களிலும் ஜெமினியின் அபரிமிதமான நடிப் பாற்றல் வெளிப்படும். குரலில் நான் வெளிப்படுத்தும் குழைவுக்கு திரை யில் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தினார் ஜெமினி கணே சன். அவருக்காக நான் பாடிய பல பாடல்களும் இன்னமும் மக்கள் மன தில் நீங்காமல் இருப்பதற்கு, அவரது இயல்பான நடிப்பே காரணம்’’ என்று அப்பாவின் நடிப்பை மனம்திறந்து பாராட்டிப் பேசுவார் பி.பி.எஸ்.
அப்பாவின் நெருங்கிய நண்ப ராக கடைசிவரை இருந்தார். அப்பாவின் கடைசி பிறந்தநாளின் போது, எங்கள் வீட்டுக்கு வந்த பி.பி.எஸ். 3 மணி நேரம் வரை அப்பா வுடன் பேசிக் கொண்டிருந்தார்.
சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடக்கும் ‘மல்டி டேலன்ட்டட் சிங்கர் பி.பி.ஸ்ரீநிவாஸ்’ நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற் பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு டாக்டர் ஜெயா ஸ்ரீதர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக