tamilthehindu :தஞ்சை பெரிய கோயிலின் பழமை, பாரம்பரியத்தை பாதுகாக்க
வேண்டும்
என்பதற்காக கோயில் வளாகத்தில் தனியார் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கக்
கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் சார்பில் நடக்கவிருந்த தியான நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கெனவே தடை விதித்தது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆதிகேசவலு அமர்வு இன்று (வியாழக்கிழமை) பிறப்பித்த உத்தரவு:
தஞ்சை பெரிய கோயில் பாரம்பரியம் கொண்டது. கட்டிடக் கலைக்கு சான்றாக பெரிய கோயில் அமைந்துள்ளது. கோயிலின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். எனவே கோவில் வளாகத்தில் தனியார் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது.
மதம் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வுகள் மற்றும் கோயில் தொடர்பான நிகழ்வுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். அப்படி அனுமதி வழங்கினாலும், அந்த நிகழ்வுகளும் மதப்படியும், கோவில் சம்பிரதாயப்படியும் நடைபெறுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
மேலும் கோயிலின் பழமை, பாரம்பரித்துக்கும், கோயில் பழங்கால தொல்லியல் நினைவுச் சின்னங்களுக்கும் எவ்வித பாதிப்பும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக