வெள்ளி, 21 டிசம்பர், 2018

பீகாரில் ஜாதி அடிப்படையில் வகுப்பறை.. விடியோ


dinamani :பாட்னா: பீகார் மாநிலத்தில் ஜாதி, மற்றும் மத அடிப்படையில் தனித் தனி வகுப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது
பீகார் மாநிலத்தில் உள்ள வைசாலி மாவட்டத்தில் லால்கன்ஜ் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில் 4 ஆண்டுகளாக ஜாதி மற்றும் மத அடிப்படையில் மாணவர்கள் தனித்தனியாக அமர வைக்கப்பட்டு வந்துள்ளனர். இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.
மாவட்ட கல்வி அதிகாரி தலைமையிலான குழு, கல்வித் துறைக்கு எழுதியுள்ள பரிந்துரையில், பிரதானமான மீனா குமாரிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

மாவட்ட நீதிபதி ராஜிவ் ரோஷன் விசாரணை நடத்தினார். விசாரணையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து பள்ளியில் தனித்தனி வகுப்பறைகள் அமைத்து இருப்பதை உறுதி படுத்தினார்.மேலும் விசாரணையின் முடிவில் பள்ளி முதல்வர் மீனா குமாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என கூறினார். இதனிடையே பள்ளி முதல்வர் மீனா குமாரி குற்றச்சாட்டை மறுத்த

கருத்துகள் இல்லை: