Indian short documentary film, Period. End of Sentence, gets shortlisted for the Oscars in the Documentary Short Subject category for the 91st Academy Awards. The 26-minute long short film is about the stigma around menstruation that women in India face and it also delves into the work of Arunachalam Muruganatham, the real-life pad man.
மின்னம்பலம் : உலகம் முழுவதும் உள்ள திரைக்கலைஞர்கள், ரசிகர்கள்
பெரிதும் எதிர்பார்க்கும் ஆஸ்கர் விருது இந்த ஆண்டு யார் யாருக்கு வழங்கப்படும் என்ற பேச்சு தீவிரமடைந்துள்ளது. பல்வேறு நாடுகளிலிருந்தும் அனுப்பப்பட்ட திரைப்படங்களை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தியா சார்பில் இந்த ஆண்டு அனுப்பப்பட்ட ‘வில்லேஜ் ராக்ஸ்டார்’ திரைப்படம் இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை. இருப்பினும் இந்திய ரசிகர்கள் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கவனிக்கவேண்டிய படம் ஒன்று இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
கோவையைச் சேர்ந்த முருகானந்தம் குறைந்த விலையில் பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்களை உருவாக்கி சாதனை புரிந்தார். இந்தியாவில் இப்போதும் கூட சானிட்டரி பயன்பாடு குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. குறைந்த விலையில் சுகாதாரமான முறையில் சானிட்டரி நாப்கின்களை உருவாக்கியது இந்தியா முழுவதும் கவனம் பெற்றது. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் முருகானந்தத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ‘பேட் மேன்’ படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் முருகானந்தம் கவனம் பெற்றார். தற்போது இவரது பணி குறித்து ‘பீரியட். என்ட் ஆஃப் செண்ட்டன்ஸ்’ என்ற ஆவணப்படம் ஒன்றை ஈரான் - அமெரிக்க இயக்குநர் ரேய்கா ஜெட்டாப்சி இயக்கியுள்ளார்.
முருகானந்தம் உருவாக்கிய மிஷின் மூலம் தயாரிக்கப்பட்ட சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்தும் ஹப்பூர் என்ற வட இந்தியக் கிராமம் ஒன்றில் உள்ள பெண்களிடம் படக்குழு இது பற்றி பேசி ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளது. முருகானந்தமும் பல தகவல்களை அளித்துள்ளார்.
மாதவிடாய் குறித்து உள்ள மூடப்பழக்கத்திற்கு எதிராகப் பேசும் வகையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. ஆவணப்படங்களின் இறுதிசெய்யப்பட்டுள்ள பட்டியலில் இப்படம் இடம்பெற்றுள்ள நிலையில் விருது பெறுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக