புதன், 19 டிசம்பர், 2018

பெரியாரை புறக்கணிக்கும் பேரணியை திக, திவிக, தபெதிக ஆதரிப்பதா ? ? டிசம்பர் 23 கரும் சட்டைப் பேரணி


சாந்தி நாராயணன் : · பெரியாரின் பேரில்  பெரியாரியர்களின் மீதே தீண்டாமையா ?
பெரியாரின் சிந்தனைகள் குழப்பத்தை நீக்கி தெளிவைக் கொடுப்பவை டிசம்பர் 23 கரும் சட்டைப் பேரணி என்ற பெயரில் பெரியாரியர்களை அழைக்கிற அழைப்பாளர்கள் ஏன் குழப்பத்தில் இருக்கிறார்கள்?
ஆட்சிக்கு யார் வரக்கூடாது  என்கிற பெரியார் யார் வரவேண்டும் என்பதில் தெளிவாய் இருந்தாரே!
இந்துத்துவா பாஜகவை வீழ்த்த அழைப்பு விடுக்கிற டிச 23 பேரணி அழைப்பாளர்கள் பேராசிரியர் அன்பழகன் அய்யா சுபவீ , தோழர் மதிமாறன் உள்ளிட்டவர்கள் மீது மாறுபட்ட பார்வை கொண்டிருப்பதேன்? 
அவர்கள் இந்துத்தவா சக்திகளும் , அவர்தம் அடிமைகளும் துரத்தப்பட்டு திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று சொன்னதாலா?
அப்படி திமுகவை ஆதரிப்பவர்கள் மீது ஏன் தீண்டாமையை கடைபிடிக்கிறார்கள் பேரணி அழைப்பாளர்கள் ?
திமுகவை ஆதரிக்கிறவர்கள் மீது தீண்டாமையை கடைபிடிப்பதனால் பெரியாரும் இந்த தீண்டாமைக்குள் வருகிறாரே?
வாக்கு அரசியலில் திமுகவை ஆதரித்தால் புறக்கணிப்போம் என்று பேரணி அழைப்பாளர்கள் சொல்வர்களையானால் பெரியாரும் புறக்கணிக்கப்படுகிறாரா ?

பெரியாரை புறக்கணிக்கும் பேரணியை திக, திவிக,  தபெதிக ஆதரிப்பதா ?
குழப்பத்தை தெளிவுபடுத்தவேண்டியோர் குழப்பத்தில் ஆழ்வதா? பார்ப்பனியம் பெரியார் இயக்கங்களை தொட்டுப்பார்க்கும் துணிவுக்கு வந்துவிட்டதா ?


இப்படித்தான் , தமிழ் தேசியம் பேசிக்கொண்டிருந்த இயக்கங்களில் உண்மையாக உணர்வாளர்கள் சீமான் பின்னால் சென்று பின்னர் மழுங்கடிக்கப்பட்டனர்.
தொடக்கத்தில் சீமான் வஞ்சகமாய் தன்னை பெரியாரியல் ஆதரவாளராக காட்டிக்கொண்டார்.
இன்னோர் பக்கம் விசிக மற்றும் பிற கட்சிகளில் இருந்து ரஞ்சித் பின்னால் ஒரு குழு சேர்ந்து திராவிட இயக்கங்களுக்கு விசிகவுக்கு எதிராக கொம்புசீவி விடப்பட்டு உள்ளனர்.
திருமுருகன் எந்த பெரும் உழைப்பும் இல்லாமல் தி வி க , த பெ தி க இவற்றை கரைத்துக்கொண்டிருந்தார்.
மே 17 போன்ற ஒட்டுக்குழுக்களை கண்டுகொள்ளாமல் இருந்த திராவிட பேரியக்கங்கள் இப்போது அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கப்போகிறீர்களா?
பட்டும் திருத்தமாட்டோமா?

 Kalai Selvi :  வெகுநாட்களுக்குப் பின் திவிக தபெதிக திக ஓரணியில் நின்று திமுகவை ஆதரிக்கும் வேளையில் தேர்தல் அரசியலையே புறக்கணிக்கச் சொல்லும் இவர்களின் மீதும் இவர்கள் ஒருங்கிணைக்கும் பேரணியின் மீதும் சுத்தமாக நம்பிக்கை இல்லை எனக்கு.

கருத்துகள் இல்லை: