LR Jagadheesan :
தமிழுக்கு
மத்திய அரசின் செம்மொழி அங்கீகாரம் பெற உதவியவர் .
தொடர்ந்து பொதுவெளியில் அவமதிக்கப்பட்டாலும் சோராமல் ஓயாமல் இயங்கிக்கொண்டிருப்பவர்; அத்தகைய சோனியாவை திரும்பிப்போகச்சொல்லும் தியாகசீலர்களே; நேர்மையாளர்களே; நியாயஸ்தர்களே டில்லிக்கான உங்களின் தேர்வென்ன?
தன் கணவரை கொன்றதற்காக தண்டிக்கப்பட்ட நளினியின் தூக்குதண்டனையை ஆயுளாக குறைக்கக்கோரியவர்; தேடிவந்த பிரதமர் பதவியை ஏற்க மறுத்தவர்; ஜாதி, மத, தேச எல்லைகளை கடந்து தன் காதலனை தேர்ந்தெடுத்தவர்; காதலித்து கரம்பிடித்தவரோடு வாழ்க்கைப்பட்டுவந்த தேசத்தின் சுகதுக்கங்களில் அர்ப்பணிப்போடு தன் பங்கை ஆற்றியவர்; ஒருவரின் ஜாதிபார்த்தே விதந்தோதும் இந்திய நாட்டில் ஜாதி முத்திரை குத்த முடியாதவர்;
இந்துத்துவ கும்பல்களால் சுமங்கலி அமங்கலி அளவ இந்தித்திணிப்பை கடுமையாக எதிர்த்த திராவிட இயக்கத்தை எதிர்க்கிறேன் என்கிற பேரில் “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டிலிருந்து ஆங்கிலத்தை முற்றாக அகற்றச்சொன்னார்கள் சிலர்.
அவர்களைப்பார்த்து காமராஜர் சொன்ன அனுபவ வார்த்தைகள்: “Englishஐ எடுத்துட்டா ஹிந்தி வந்து குந்தும்னேன். ஹிந்தியை எதுக்கணும்னா English நாக்குத்தேவைன்னேன்”.
அதே தான் இன்றைய இந்திய அரசியலுக்கும் பொருந்தும். சோனியா வேண்டாம்; காங்கிரஸ் வேண்டாம் என்றால் டில்லிக்கான தமிழ்நாட்டின் தேர்வென்ன? நட்புசக்தி எது? அதை அடையாளம் காட்டிவிட்டு பின் நீங்கள் சோனியாவுக்கு எதிராக கம்புசுற்றுங்கள். அதுவே சரியான அரசியல். அறிவுநாணயமுள்ள, ஆக்கப்பூர்வமான அரசியலும் கூட. அப்படி செய்யாமல் வெறுமனே சோனியா ஒழிக என்பது ஐந்தாம்படையின் வேலை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக